அவளுக்காக காத்திருந்தேன்

அவளுக்காக காத்திருத்தேன்🌹

கடற்கரை ஓரம்
காற்று வாங்க செல்லவில்லை
என் காதலாள் வருகைக்காக காத்திருந்தேன் இல்லை தவம் இருந்தேன்.

கடல் அலைகள் என் கால்களை அடிக்கடி தழுவ
இரவார் பகலை விழுங்க
வானத்தில் என்னவளின் அழகுடைய நிலவும் வந்து விட
என் இதய ராணி மட்டும் ஏன் வரவில்லை.

நிதானம் என்னிடமிருந்து விடை பெற
கோபம் என்னுள் குடி புக
கைபேசி சினுங்கியது
குறுஞ்செய்தி ஓசையுடன்
அதில் அவள் எழுதியிருந்தாள்
"மண்ணவனே கோபமா
என்னவனே என் மீது சினம் கொண்டாயோ
தவிர்க்க முடியாத சில காரணங்களால் வர இயலவில்லை
வழக்கமான பதிலாக உள்ளதா
தப்பித்துகொள்ளலாம் என்ற எழுத்தாக இருக்கிறதா
நான் என்ன முட்டாளா
இவ்வளவு நேரம் உனக்காக கால் கடுக்க காத்திருக்க
உங்கள் மைண்டு வாய்ஸ் எனக்கு கேட்கிறது
என் எதிர்கால கணவனே
நீ என்னை உன் மனம் என்னும் தீ முட்டிய வாணலியில், நன்றாக என்னை வருத்தெடுப்பது உணர்கிறேன்.
கண்ணாளனே
என் காவிய நாயகனே
என்னை முழுவதும் ஆட்கொண்ட தமிழ் வீரனே
அழகிய தமிழ் மகனே
மண்ணித்து விடு
உண்மையில் முக்கிய வேலை தான்
என்ன சினம் கொண்டு கிளம்பிவிட்டாயா
இனிமேல் என்னுடன் பேசமாட்டாயா
இனிய இன் சொல் கூறும் என் அருமை காதலனே
சற்றே திரும்பி பார்.

பூசெண்டு, இனிப்பப்பம்,
மெழுகுவர்த்தியுடன்
அலங்கார தேர் போல்
அழகு தேவதையாக
அவள் நிற்க
என்னை உற்று நோக்க
அதிர்ச்சி கலந்த ஆணந்தத்தில் நான் ஆகாயத்தில் மிதக்க
" பிறந்த நாள் வாழ்த்துக்கள் "
அவள் அழகிய செவ்விதழ் விரித்து உதிர்க்க.
கண்களில் நீர்முட்ட
குற்ற உணர்வுடன்
'நன்றி' என்று நான் கூற....
- பாலு.

எழுதியவர் : பாலு (18-Apr-19, 11:43 pm)
பார்வை : 509

மேலே