ஆணவம்

வசந்தத்து தென்றல் அசைந்து
ஆடி வந்தது, வந்து அங்கு
வானளாவி வளர்ந்த மூங்கில்
புதர் சுற்றி வலம் வந்து பின்
துளைகள் கொண்ட மூங்கில்
ஒன்றில் நுழைய இசையாய்
புல்லாங்குழல் இசையாய்
வெளிவந்தது ....... கானகத்தில்
மேயும் ஆவினங்கள் மதி மயங்க
புலியும் சிங்கமும் கூட
ஒடுங்கி முயல்போல் ஓட...
தென்றல் நினைத்தது
நானே கண்ணனின் கீதம் என்று
அதற்க்கு மூங்கில் சொன்னது
தென்றலே என்னுள் நீ புகுந்தாய்
குழல் இசையாய் மாறினாய்
நான் இல்லை என்றால் நீ
வெறும் காற்றே ....புரிந்துகொள் என்றது
இப்போது தென்றல் சிந்திக்க துடங்கியது
.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (18-Apr-19, 9:47 pm)
Tanglish : AANAVAM
பார்வை : 174

மேலே