காதலின் காலில் விழுந்தே இறந்தேன்...
புதிதாக பிறக்கும் குழந்தைப்போலே
உனைகண்டு எல்லாம் மறந்து போனேன்!
அதுயென்ன அதிசயம் என்றுகேட்டால்
இவள்தானே என்று உன்னை சொன்னேன்!
அதை கண்டு நிழல்
என்னுடன் சண்டையிட்டான்!
அவனிடம் நான்
ஏனென்று கேட்டேன் பெண்ணே!
அவன் உன்னிடத்தில்
காதலை சொல்ல நினைத்தானாம்!
ஏக்கங்கள் அனைத்தும் உன்னுடன் தானே
வாழவே துடிக்கின்றதே!
நினைவை உடைத்து கொண்டு
கனவில் குதித்துவிட்டேன்..
ஏனோ?
என்னுடன் வாழ்வதை நீ
கசக்கும் கவிதையாய் உணருகிறாய்!
ஏற்றங்களும் இறக்கங்களும்
என்னுள் நுழைந்தது உன்னால் தானே..
செயற்கையில் காதல் ஒன்றினை செய்து
என்னுடன் வைத்துக் கொண்டேன்!
காதலில் உயிர்கொடுக்க
நானே மறந்துவிட்டேன் ..
ஐயோ..
நான் செய்த தவறினிலே
காதல் கல்லாய் மாறியதே!
என்மனதும் கதறியதே
காதலின் காலில் விழுந்தே இறந்ததே...