ர~ஸ்ரீராம் ரவிக்குமார் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  ர~ஸ்ரீராம் ரவிக்குமார்
இடம்:  தமிழ்நாடு (திண்டிவனம்)
பிறந்த தேதி :  19-May-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Jun-2017
பார்த்தவர்கள்:  4137
புள்ளி:  346

என்னைப் பற்றி...

(இயற்கையும் நானும் நண்பர்கள்)
நம்ம பசுமை திண்டிவனம் நீர் நிலைகள் பாதுகாப்பு இயக்கம் இயக்குனர்
~ர.ஸ்ரீராம் ரவிக்குமார்

மனிதன் இல்லாத இயற்கை உலகம்
இயற்கை மட்டும் வாழ்ந்தால்
****************************
முகிலுக்கு கண்கள் வைத்து!
இரவுக்குக் கூந்தல் வைத்து!
நிலவென முகம் படைத்து
நட்ச்சத்திரப் பூக்கள் சூடி!
மண்ணுலகு மடியாகி!
விண்ணுலகுக் கொடியாகி!
சுவாசத்துக்கு மரங்கள்!
வாசத்துக்கு மலர்கள்!
சுற்றி வரக் குருவி!
தூரலிடும் அருவி!
வற்றாத உதிரக் கடல்!
சொட்டாதப் பனிமலை!
அந்தரத்து விண்ணுலகு!
விண்ணைத் தொடும் மலை அழகு!
சேவல் விடியல்!
காக்கையின் கரையல்!
சிட்டுக்குருவி இசை!
நீராட வான் மழை!
நிழலாட ஆதவன்!
இதழ் சுவைக்கத் தேனி!
வண்ணத்துப் பூச்சி ஓவியம்!
விதை விதைக்கும் விவசாயிகள்
பழம் சுவைக்கும் பறவைகள்
பாதையிடும் பாம்புகள்!
ஓலமிடும் தவளைகள்!
ஓடி ஒளியும் எலிகள்!
கூடி மகிழும் காக்கைகள்!
தாய்மையுடன்
குரங்கு தாலாட்டும் மரக்கிளை!
கோவப் படும் சிங்கம்!
சிவந்த
கோவைப் பழம்!
கொக்குகள் நீதிபதி!
மீன்கள் குற்றவாளி!
பதுங்கிவிடும் நண்டு!
பாய்ந்திடும் புலி!
திருட்டு நரி!
இருள் விழி ஆந்தை!
உளவாளிக் கழுகு!
ஊர் சுற்றும் தென்றல்!
இல்லம் சுமக்கும் ஆமை!
திரவம் சுரக்கும் நத்தை!
பாறையிலும் மரங்கள்!
பாதையிலும் மரங்கள்!
வரிசையில் எரும்புகள் செல்ல!
மழைக்கு காளான் குடை!
ஒளிமயமாய் மின்ன மின்மினிப்பூச்சிகள்!
தீ பரப்பாதக் கற்கல்!
பிச்சையெடுக்காத யானை!
பாரம் சுமக்காதக் காளை!
மலத்தில் உழாத பன்றிகள்!
களையெடுக்காத புல்வெளிகள்!
வணங்கி நிற்க்கும் பனைமரம்
ஆவாரம்பூ அழகு!
சண்டையிடும் ஆடுகள்!
துள்ளி விளையாடும் கன்றுகள்!
வேடிக்கை இல்லாத மயில்கள் ஆட்டம்!
கலையாதச் சிலந்தி வலை! சதிகாரச் சிலந்தி!
சாதிக்கத் தூக்கனாங்குருவி!
பொருமைக்கு மீன்கொத்திப் பறவை!
இரவும் பகலும் வரிக்குதிரை!
மனிதனை சுமக்காத குதிரைகள்!
ஒட்டகம் ஒய்யாரம்!
உச்சி முகரும் ஒட்டகச்சிவிங்கி!
பேச முடியாத மனிதக்குரங்கு!
அடைப்படாத வண்ணக்கிளிகள்!
சிறைப்படாத வண்ண மீன்கள்!
வேட்டையாடாத பறவைகள்!
இரத்தம் படியாதப் புறாக்கள்!
கிரிடம் இழக்காத மான்கள்!
கொலை செய்யாத மரங்கள்!
ஆடையாகதப் பட்டுப் புழு!
வண்டுகள் ரீங்காரம்!
வெட்டுக்கிளி கானம்!
பந்தியில் இல்லாத வாழைமரம்!
ரசிக்காத வானவில்!
இயற்கை ருசிக்காத மனித வாடை!
மகிழம் பூ வாசம்!
மகிழவே அழியாத ஆறுகளும் உண்டு!
விண் கற்கல் விழுந்து வெட்டியக் குளம்!
உணவுக்கு மட்டுமே வேட்டை!
ஒவ்வொன்றும் அதிசயம்!
இயற்கையின் சுவாரசியம்!
அழியாத வனங்கள்
அழியாத வளங்கள்!
அழியாத இன்னும் பல இனங்கள்!
படைத்துச் சென்ற இயற்கையை
மனிதன் படையல் போட்டு உண்ணவா?
மண்ணுலகை அழித்து
விண்ணுலகம் போகும் மதிக் கெட்ட
மனிதர்கள் வாழும் இயற்கை
பூமியில் இவை வாழ்வது அதிசயமே!
மனிதன் இல்லாத பூமியில்
இவைகள் வாழ்ந்தால் எப்படி இருக்கும்?
~ர-ஸ்ரீராம் ரவிக்குமார்

என் படைப்புகள்
ர~ஸ்ரீராம் ரவிக்குமார் செய்திகள்


என்னவள்!

என் நீண்ட தூர 
பாலைவன பயணத்தில்
வெப்பம் போக்கிட  நிலைக்கொண்ட மழைப்புயல் அவள் நினைவுகள் .
ர.ஸ்ரீராம் அனுரேக்கா

மேலும்

ர~ஸ்ரீராம் ரவிக்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jun-2023 2:16 pm

ஊரே உறங்கிய போது!
இரவை ரசிக்கும் நிலாவாக என்னவள் என்னை ரசிப்பது பிடிக்கும், பாதி உறக்கத்தில் நானும் திருடனாகிறேன்! நான் திருடுவது அவளுக்கு தெரியாமலே நகர்ந்துவிடும் அந்த இரவும் பகலாகக் கடந்து .....
நான் திருடியது ஏனோ? பணமோ? பொருளோ? அல்ல!
"அவள் என்னை ரசிப்பதையும் ,அவள் எனக்காக என் வலிகளுக்காக அழுத அந்த நொடிகளையுமே.
-ஸ்ரீராம் ரவிக்குமார்
ஸ்ரீராம் அனுரேக்கா

மேலும்

ர~ஸ்ரீராம் ரவிக்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Aug-2022 2:18 pm

உன் நிழலை தான் என்னால் தொடர இயலவில்லை!
ஆனால் உன் நினைவுகளை எப்போதும் தொடருவேன் ........
......ர.ஸ்ரீராம் ரவிக்குமார்

மேலும்

✍️உலக கடிதம் எழுதும் நாள்
உலக கடித தினம்

என் சோகங்கள்
எல்லாவற்றையும் சுமைந்தாய்
என் கண்ணீரிலும் நனைந்தாய்!
என் இதயம் சுமந்த வலிகளை எல்லாம்
உன்னுள் புதைத்தேன் ஆறுதல்
கூறினாய் இன்றும் உன்னை காதலிக்கிறேன் கடிதமே.......
தூவல் கொண்டு தூது அனுப்பும் காலம் தொலைத்த நவீன உலகம்😔
ர.ஸ்ரீராம் ரவிக்குமார்

நாகரீக உலகில் நம்மை அழகாய் நேசித்த கடித காலம்
90 கிட்ஸ்..... இதையும் இழந்துவிட்டோம்
அன்புடன் ர.ஸ்ரீராம் ரவிக்குமார் இயற்கை காதலன்

மேலும்

ர~ஸ்ரீராம் ரவிக்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Jul-2021 8:58 am

குறிப்பேடு
😔😔😔😔

பூட்டிய இதயத்தில்
கூட்டிய குப்பைகளாய் துரோகத்தின்
சுவடுகள்............
...............ர.ஸ்ரீராம் ரவிக்குமார்

மேலும்

முத்தமிட்டு
கட்டில் தொட்டு
முடிவதில்லை காதல்!
முகம் சுருங்கி
முதுமை கடந்து
கல்லறை சென்றாலும்
மறையாததே
காதல்...........
.............ர.ஸ்ரீராம் ரவிக்குமார்

மேலும்

வணக்கம் ஸ்ரீராம் அவர்களே... சுப்பிரமணிம் பாலகிருஷ்ணன் என்னும் நான் (சுபா) ஆண்பால்.. ஆனால்... தாங்கள் என்னை "அம்மா" என்று அழைத்து "தாயுமானவன்" என்ற பெருமையை கொடுத்துள்ளீர்.. வாழ்த்துக்கள்.. வாழ்க நலமுடன் 05-Jun-2021 8:00 am
வணக்கம் அம்மா🙏 உங்கள் வருகைக்கும் அழகான ஆழமான கருத்துகளுக்கும் நன்றியும் அன்பும் அம்மா💚🙏 05-Jun-2021 7:14 am
வணக்கம் ஸ்ரீராம் அவர்களே... அருமையான வரிகள்... உண்மையான காதலை... கல்லறையில் அடைக்க முடியாது... காதல் கல்லறையிலும் சுகமாகவே இருக்கும்.... உண்மையான காதலுக்கு அழிவு என்பதில்லையே..! வாழ்த்துக்கள்... வாழ்க நலமுடன்...!! 04-Jun-2021 6:47 am
ர~ஸ்ரீராம் ரவிக்குமார் - புதுவைக் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-May-2020 11:55 am

மாவீரன் வீரப்பன்

இவன்
கண்ணி வைத்திருந்தான்
கையில் கன் வைத்திருந்தான்
எந்தக் கன்னிமீதும்
கண் வைத்ததில்லை

இவன் வருகைக்காக
காட்டில் விலங்கு காத்திருந்தது
நாட்டில் விலங்கு காத்திருந்தது

தந்தத்தை வீழ்த்தியவன்
தந்திரத்தால் வீழ்த்த பட்டவன்

இன்று இவன் இருந்திருந்தால்
கன்னடத்திலிருந்து தண்ணீர் வந்திருக்கும்
தமிழன் கண் தடத்தில்
இருந்து கண்ணீர் வந்திருக்காது

காட்டு ராஜா சிங்கம்
அதனை
வீழ்த்தி விட்டு
காட்டை கட்டி ஆண்டது
இவன் அங்கம்
ஏழைகளுக்கு உதவிய தங்கம்
இவனைப் பிடிக்கிறேன்
என்று சிலர் படுத்தினர்
தமிழ் பெண்களை மான பங்கம்

இவன் காடுவெட்டி குரு அல்ல
காட்டை வெட்டிய கு

மேலும்

வஞ்சத்தால் வீழ்ந்துவிட்டார் 20-May-2020 7:17 am

அன்று
நீ பேசும் போது
இளமையாய் இருந்தேன்
இன்று
நீ பேசும் போது
அனைத்துமே இழந்தேன்
காதலுடன்
கடந்ததடி இளமையும்
ஆனால்
நினைவுகள் மட்டுமே
புதைந்ததடி என்னுள்
அன்புடன் ர ஸ்ரீராம் ரவிக்குமார்

மேலும்

நன்றிகள் சகோ நிச்சயமாக நேரம் ஒதுக்கி செய்கிறேன் நன்றி 17-Apr-2020 9:11 am
நல்ல முயற்சி உங்களை முயற்சிக்கும் வாழ்த்துக்கள் தொடர்ந்து படைப்புகளை பதிவேற்றங்கள் மற்றவர் படைப்புகளுக்கு கருத்திலும் செய்யுங்கள் 15-Apr-2020 11:17 pm
ர~ஸ்ரீராம் ரவிக்குமார் - san அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Sep-2019 1:05 pm

பாகற்காய்-பிரித்து எழுதுக .

மேலும்

பாகு+அல்+காய் தமிழில் பாகு என்பது இனிப்பு அல் ...அல்லாத +காய் (இனிப்பு அல்லாத காய்) தமிழின் சிறப்பு 06-Sep-2019 2:29 pm
பாகு + அல்+காய் 04-Sep-2019 7:13 pm
பாகல்+காய் 03-Sep-2019 3:36 pm

வான் பொய்த்து யூரியா தின்று தின்று
மண்ணும் நஞ்சாகி பாழாய்ப்போக,
போதாக்குறைக்கு விளைச்சலிலுள்ள
நன்செய்நிலங்களையும் அழித்து அங்கு
அதன்மேல் தேசிய நெடுஞ்சாலை அமைக்க,
அரசாங்கம், இன்னும் நகர்புறத்தில் இடம்
போதவில்லையென்று நகரம் சுற்றிய
கிராமத்து பயிர் நிலங்கள் காணாமல் போய்,

மேலும்

arumai 29-Jul-2019 11:33 am
தங்கள் அமுதாக கருத்தில் மகிழ்ந்தேன் நண்பரே ஸ்ரீராம் ரவிக்குமார் 26-Jul-2019 7:10 am
வணக்கம் ஐயா! மக்கள் தொகை பெருக்கம் , காடுகள் அழிப்பு நவீன உலகில் ஏற்படும் உணவு பற்றாக்குறை அதை சமாளிக்கும் பொருட்டு வருடம் முழுவதும் விளைந்து பயன் தர வேண்டிய பயிர்கள் எல்லாம் மாதக்கணக்கில் சுருங்கிவிட்டது எங்கும் ரசாயன பொருட்கள் கலப்பட உலகம் மக்கள் தேவை என்ற பெயரில் பாலித்தீன் வீதி உலா, எங்கும் சாலைகள் சாலையின் இருபக்கமும் மின்சாரக் கம்பிகள் தடையின்றி மின்சாரம் வரவே மரங்கள் வெட்டப்படுகிறது நமக்கு சுவாசம் தட்டுப்படுகிறது.... (மனிதன் பூமியை அழித்தது பத்தாது என்று வேற்றுகிரகத்தையும் நாசம் செய்யக் கிளம்பி விட்டான் ) இந்த பூமியை மனிதன் தவறாக ஆளுகிறான் விளைச்சல் நிலம் எல்லாம் கட்டிடமாய் மாறுகிறது ஆற்றுப்பாலம் இன்னும் கொஞ்சம் காலத்தில் சாலை ஆக மாறி விடும் போல , உணவில் நஞ்சு கலந்து மனிதனின் ஆயுட்காலம் குறைந்து விட்டது எல்லா பொருட்களிலும் கலப்படம்..... இயற்கையோடு ஒன்றினைந்த அந்த காலம் மக்கள் தொகை பெருக்கத்தால் மாறிவரும் இந்த காலம் .....! வாகனம் புகை மாசு, பாலித்தீன் ஒழிப்பு, கடலில் குப்பைகள் கலந்து கடல்வாழ் உயிரினங்கள் பாதிப்பு, புதிய புதிய ரசாயன உரங்களால் மண் மலடாகி விட்டது, அந்த உணவை உட்கொள்ளும் நமக்கும் ஆயுள் குறைந்துவிட்டது நோயும் பெருகிவிட்டது....... ஊழல் பெருத்த உலகில் இயற்கை வாழ முடியுமா? மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் உங்கள் எண்ணம் நல்லது வாழ்க வளமுடன் ஐயா,,,,🙏 26-Jul-2019 2:46 am

எங்கோ ஒரு சத்தம்
மௌனம் கலைந்த இரவில்
கண்டுக்கொண்டேன் நான் வழிப்போக்கனாய்!
ஆந்தையும், எலியுமாய்
ஓட்டம் பிடிக்கிறது அந்த ஒற்றையடிப்பாதையில் என்னை கண்டவுடன்!
மரங்கள் கைகள் கோர்த்து
மலைகள் போல இரு பக்கமும்
விண்மீன்களாய் மின்மினி பூச்சிகளை சுமந்துக்கொண்டு!
மண் பாதையில் நிலவு தந்த
வெளிச்சத்தில் நான்!
வான் வெளியில் சத்தமின்றி
விமானமாய் கொக்குகள்!
தூரத்தில் சலங்கை கட்டிய
மாட்டு வண்டி என்னை கடக்க
அச்சமின்றி நானும் அதை கடக்கிறேன்!
வெட்டுக்கிளிகளும் என்னுடன்
சாலையெங்கும்.
திடிரென்று ஒரு சத்தம்
திடுக்கிட்டு எழுந்துவிட்டேன்
தூக்கத்தில் இருந்து......
கனவாய் கலைந்துவிட்டது
இருபது வருடங்கள்
முன்னே நான் கடந்த

மேலும்

உண்மை தான் நண்பரே..... உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் ,நன்றி❤ மிக்க மகிழ்ச்சி ❤ 18-Jul-2019 5:53 am
20 வருடங்கள் தொலைந்தாலும் ஞாபகம் தொலைக்கவில்லை 18-Jul-2019 12:31 am
ர~ஸ்ரீராம் ரவிக்குமார் - Aruvi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Nov-2017 6:00 am

தப்பிப் பிறந்தவர்கள்தான்
தவறானவர்கள் அல்ல
திருநங்கைகள்

மேலும்

அவர்களும் மனிதர்கள் தானே! அனுதாபம் அழகு 20-Nov-2017 3:49 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (43)

ஜவ்ஹர்

ஜவ்ஹர்

இலங்கை
Deepan

Deepan

சென்னை
user photo

வீரா

சேலம்

இவர் பின்தொடர்பவர்கள் (155)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
கா.ந.கல்யாணசுந்தரம

கா.ந.கல்யாணசுந்தரம

செய்யாறு, திருவண்ணாமலை மா

இவரை பின்தொடர்பவர்கள் (43)

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே