வீரப்பன் 1

மாவீரன் வீரப்பன்

இவன்
கண்ணி வைத்திருந்தான்
கையில் கன் வைத்திருந்தான்
எந்தக் கன்னிமீதும்
கண் வைத்ததில்லை

இவன் வருகைக்காக
காட்டில் விலங்கு காத்திருந்தது
நாட்டில் விலங்கு காத்திருந்தது

தந்தத்தை வீழ்த்தியவன்
தந்திரத்தால் வீழ்த்த பட்டவன்

இன்று இவன் இருந்திருந்தால்
கன்னடத்திலிருந்து தண்ணீர் வந்திருக்கும்
தமிழன் கண் தடத்தில்
இருந்து கண்ணீர் வந்திருக்காது

காட்டு ராஜா சிங்கம்
அதனை
வீழ்த்தி விட்டு
காட்டை கட்டி ஆண்டது
இவன் அங்கம்
ஏழைகளுக்கு உதவிய தங்கம்
இவனைப் பிடிக்கிறேன்
என்று சிலர் படுத்தினர்
தமிழ் பெண்களை மான பங்கம்

இவன் காடுவெட்டி குரு அல்ல
காட்டை வெட்டிய குரு

இவன்
செந் தனதிற்காக
சந்தனத்தை கடத்திய சந்தனம்

இவன்
நிறைத்து வைத்தான்
மீசையை
ஏழைகள் உயர
உரக்க வைத்தான் ஓசையை
ஆயினும்
இறைவன் குறைத்து
வைத்தான் இவன் ஆசையை

நீயின்றி அலங்காடு
அலங்காரம் இன்றி கிடக்கிறது

நீயின்றி நம்நாடு
அலங்கோலமாக கிடக்கிறது

தலைவா
விண்ணைத் திறந்து வா
மண்ணில் பிறந்து வா

எழுதியவர் : குமார் (14-May-20, 11:55 am)
பார்வை : 357

மேலே