தொலைந்துவிட்டதா

எங்கோ ஒரு சத்தம்
மௌனம் கலைந்த இரவில்
கண்டுக்கொண்டேன் நான் வழிப்போக்கனாய்!
ஆந்தையும், எலியுமாய்
ஓட்டம் பிடிக்கிறது அந்த ஒற்றையடிப்பாதையில் என்னை கண்டவுடன்!
மரங்கள் கைகள் கோர்த்து
மலைகள் போல இரு பக்கமும்
விண்மீன்களாய் மின்மினி பூச்சிகளை சுமந்துக்கொண்டு!
மண் பாதையில் நிலவு தந்த
வெளிச்சத்தில் நான்!
வான் வெளியில் சத்தமின்றி
விமானமாய் கொக்குகள்!
தூரத்தில் சலங்கை கட்டிய
மாட்டு வண்டி என்னை கடக்க
அச்சமின்றி நானும் அதை கடக்கிறேன்!
வெட்டுக்கிளிகளும் என்னுடன்
சாலையெங்கும்.
திடிரென்று ஒரு சத்தம்
திடுக்கிட்டு எழுந்துவிட்டேன்
தூக்கத்தில் இருந்து......
கனவாய் கலைந்துவிட்டது
இருபது வருடங்கள்
முன்னே நான் கடந்த ஒரு
நாள் இரவு பயணம்........

ர~ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : ர~ஸ்ரீராம் ரவிக்குமார் (17-Jul-19, 12:53 am)
பார்வை : 349

மேலே