நீ நீயாக
உன் வாழ்வில் வரும் நேரம்,
உன் நேரம்!
உனக்கான நேரம்!
உன் சிரிப்பு
உன் அழுகை
உன் வெற்றி
உன் தோல்வி
உன் கோபம்
உன் காதல்
உன் வாழ்க்கை அனைத்தும்
உனக்கே உனக்கானதும்கூட!
உன் சுயமிழந்து வாடுவதைவிட,
உனக்காக அழகாக நீயே வாழ்ந்துவிடு!
நீ நீயாக இரு!
நான் என்பது சயநலமுமில்லை!
நாம் என்பது பொதுநலமுமில்லை!
உன் மனதின் பேச்சைக் கேள்!
மலையையே நீ புரட்டலாம்!
உன் அறிவின் சொல்லைக் கேள்!
மடுவையே மடக்கலாம் நீ!
உன் சொல்
உன் சிந்தனை
உன் வினை
உன் சொல்
உன் பேச்சு
உனக்காய் இருத்தலே உன் நிஜம்!
அதே வேலை
நீ மகிழ்ந்து,
பிறரை வருத்தாதே!