எனக்குள்ளே

காலம் கடந்த பின்
நினைத்து பார்க்கிறேன்
என்னுடைய செயல்பாட்டை
எதிலும் தேர்வுஇல்லை
எதோ வாழ்ந்தேன்
என்று நினைக்கையில்
சிரிப்பதா அழுவதா

காலம் மாறி விட்டபின்
சிரிப்பது நேர்மையில்லை
அழுவது தீர்ப்புஇல்லை
மனம் நோக எழுதுகிறேன்
என்னுடைய தாபங்களை
ஒரு வடிகாலாக எண்ணி
ஓர் ஆறுதல் என்னுள்ளே

வளர்ந்தேன் செலவச் செழிப்பில்
படித்தேன் விழித்து விழுந்து
எதிலும் முதல் என்று இ றுமாந்திருந்தேன்
எதற்கும் ஒரு எல்லை உண்டல்லவோ
ஒரு வயதுக்கு பின் எதிர்கொண்டேன்
சண்டையும், சச்சரவும் அடுக்கு அடுக்காக
நிம்மதி இழந்தேன், வரவையும் தொலைத்தேன்

வயது ஏறிக்கொண்டே போனது
எதையும் நிறுத்தலாம் வயது தாண்டி விடும்
விட்டதை நினைத்து ஏங்குவதா
கிடைத்ததைக் கருத்தில் கொண்டு மகிழ்வதா
தெரியாமல் முழி பிதுங்கி நிற்கிறேன்
அணைக்க கரம் இல்லை வாழ்த்த நாவில்லை
வாழ்கின்றேன் உணர்ச்சியற்ற ஜடமாக
















.

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (28-Jan-25, 10:25 pm)
சேர்த்தது : Meena Somasundaram
Tanglish : enakulle
பார்வை : 45

மேலே