நீதியும் நாணையமும்

விட்டதைப் பிடிக்க தாவித்தாவி ஓடுகிறேன்
கிட்டும் போது நழுவி விடுகிறது
மீண்டும் தவ்வித் துழாவுகிறேன்'
சிக்கவில்லை, பறந்து விடுகிறது .

விடாமல் தொடர்கிறேன் அதன் பின்னால்
எப்போதும் இதுவே என் பழக்கம்
என்னையே நான் நொந்து கொண்டு
திரும்ப யத்தனிக்கும்போது

வந்து விழுகிறது என் மடியில்
எடுத்துக்கொண்டு திரும்பும் பொது
மனம் மகிழவில்லை ஏனோ
வலி ஒன்று தோன்றி மறைகிறது.

.நின்று நிதானித்து பார்க்கும்போது
தேடி தேடி தான் கிடைக்குமா
என்னைப் பொறுத்தவரை
என்று அங்கலாயிக்கிறேன்

நேர்மையாக வாழ்க் கூடாது
உண்மையாய்ப் பேசக்கூடாது
பேசினால் யாவருக்கும்
வேண்டாதவளாய் விடுகிறேன்.

என்னை மாற்றிக் கொள்ள முடியவில்லை
வாளமால் இருக்க இயலவில்லை
வாழ்கிறேன் தனிமரமாக
ஏன் துணை நீதியும் நாணையுமும்




.

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (29-Jan-25, 4:17 pm)
சேர்த்தது : Meena Somasundaram
பார்வை : 21

மேலே