அன்னையை வணங்குவோம்

அன்னையை வணங்குவோம்

அன்பையும் அறிவையும் எனக்கு கொடுத்தவள்
ஆசையோடு ஆகாரத்தை எனக்கு ஊட்டியவள்
இன்பத்தைத் தந்து இன்னல்களை வைத்துக் கொண்டவள்
ஈடேதும் கேட்காமல் தன்னலத்தை பார்க்காமல் வாழ்ந்தவள்
உயிரினும் மேலாக என்னைக் கருதி அதனால் மகிழ்ந்தவள் ஊரெல்லாம் வியக்கும் வகையில் என்னை வளர்த்தவள்
என் வளர்ச்சியில் என்றும் தன்னை வருத்திக் கொண்டவள்
ஏமாற்றங்களை தள்ளி விட்டு என்னலத்தையே விரும்பியவள்
ஐம்புலனையும் அடக்கி எனக்காக இறைவனை வேண்டியவள்
ஒன்றாக வாழ்ந்து உயிரோடு கலந்து என்னையே நினைப்பவள்
ஓயாமல் ஓசையின்றி உழைத்து உடலை வருத்தி வாழ்பவள்
ஒளவையை போல் ஐங்கரனை வேண்டி நான் நலமோடுவாழ
எப்பொழுதும் நினைக்கும் அன்னையை இந்நாளில் மறவாது
தொழுது வாழ்த்துப் பெற்று மனம் நிறைந்த அன்போடு வணங்குவோம்

எழுதியவர் : கே என் ராம் (6-May-25, 12:17 pm)
சேர்த்தது : கே என் ராம்
Tanglish : annaiyai vananguvom
பார்வை : 19

மேலே