Sara Tamil - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Sara Tamil |
இடம் | : |
பிறந்த தேதி | : 17-Jan-1999 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 28-Mar-2019 |
பார்த்தவர்கள் | : 746 |
புள்ளி | : 23 |
கவி மூலம் என் கருத்துக்களை பதிக்கிறேன்!
இரவின் குளுமை
இதமாய் இனிக்கும் நேரம்!
ஓராயிரம் கதை பேசி
ஓட்டம் சிறிதுமாய்
அன்னை மடியெனும்
அரியணையில் பெரிதுமாய்
அமர்ந்து
நிலவிடம் விலைபேசி
வின்மீனிடம் பழிப்பு காட்டி
நிலத்திற்கு சிறிதூட்டி
செப்பிதழ் பிரித்து
தானும் உண்டு!
அன்னம் மீதம் இருக்கவே,
துயில் கொள்ள தொடங்கியதே!
அம் அழகிய மொட்டு!
உம் சொல்ஈட்டி
என் மனதை கிழித்தது
மட்டுமல்லாமல்
முட்சொற்களை
தைத்து விட்டும்
சென்றதே!
சகியாய் தெரிந்த நீ!
சகலமுமாய் மாறினாய்!
என் பார்வையில்
மாற்றமில்லை,
என் மனதினில் மாற்றம்!
மாற்றம் ஏமாற்றமாய் மாறாமல்
எனக்கு ஏதுவாய் அமையுமா?
நீ
கேட்கும்
கேள்விகளுக்கு
என்னிடம்
பதிலில்லை!
பதிலிற்கு
பதிலாக
நானே வருகிறேன்,
உன் கேள்விக்கான பதிலாக!
அன்பின் ஊற்றாய்
அரவணைக்கும் தெய்வமாய்
காக்கும் கடவுளாய்
திகழும் ஜீவன்- அப்பா!
என் தெய்வம்
என் முதல் தோழன்
என் ஆசான்
என் குழந்தை
என் பலம்
என் வரம்
என் சிந்தனை - என் அப்பா!
எல்லா அப்பாவிற்கும் தன் பிள்ளை அழகே!
அழகை காணாது அன்பை விதைக்கும் ஒரே உயிர் - அப்பா!
எனக்காய் வந்த ஆண்தேவதை,
இறைவன் எனக்காய் தந்த வரம்
இவரையன்றி எவரும் எனக்கு உயர்வில்லை!
தன் கழுத்தை எனக்காய் ஏணியாக்கி,
தன் தோளை எனக்காய் வண்டியாக்கி,
தன் மார்பை எனக்காய் தொட்டிலாக்கி,
தன் இதயத்தில் என்னை சுமந்திடும் அன்னை- என் அப்பா!
நான் அடித்தால் எனக்காய் அழுது,
நான் சிரித்தால் என்னுடன் சிரித்து,
எனக்காய் வாழும்
என் சாமி - என் அப்பா
இதழ் விரித்து மலர்ந்த மலரின் மணம் மனதை கட்டி இழுக்க
அதன் வண்ணத்தின் வனப்போ சொக்க வைக்க , அந்த மணத்திற்கும் வனப்பிற்கும் நான் மயங்கவில்லை என பொயுரைத்த கதிரவன், தினமும் அந்த மலருக்காய் அதிகாலையிலே வருகிறான் ஏனோ?
காலையில் கதிரவனை கண்டு இதழ் விரித்தது!மாலையில் நிலவை கண்டு தலை குனிந்தது ஏனோ?
ஒருவேலை பிரிவுத் துயரால் தானோ?
அதனாலே கதிரவன் மலரவள் மலர அதிகாலையிலே வருகிறானோ?
தனக்காக ,வாழ்பவன் மனிதனா அல்லது சமூதாயத்துக்காக வாழ்பவன் மனிதனா,,
அறத்தோடு வாழ்பவன் மனிதனா,
அறம் தவறி வாழ்பவன் மனிதனா,
அடுத்தவனை பழிசுமத்தி வாழ்பவன் மனிதனா,
மனித நேயத்துடன் வாழ்பவன் மனிதனா,
முகமூடி அணிந்து வாழ்பவன் மனிதனா ,
மனிதனாக பிறந்து மனிததன்மை இழப்பவன் மனிதனா,,,,
மனிதனாக பிறந்த அனைவரும் ,
வருங்காலத்தில் நான் மனிதன் இல்லை..என்று சொல்லும் நிலை வந்தாலும் ஆச்சரியம் இல்லை......
பல்லாண்டு படித்து
பண்போடு திகழ்ந்து
பணம் தேடாது
பாலினம் பிரிக்காது
அறம் செய்து
அன்போடு ஆதரிக்கும் மகாதேவன்!
நோயை கண்டபின்
நேரம் நோக்காமல்
மனம் கோணாமல்
முகம் சுளிக்காமல்
தன் தேகநலம் அறியாது
இரவு பகலாய்
பிறர் உயிருக்காய்
உழைத்திடும் ஜீவன் அவனே!
அவனுக்கு
ஜாதி பெரிதல்ல
ஜனமே பெரிது!
மதம் தேவையில்லை
மானிட நலமே தேவை!உடுத்தும் உடைப்போல் - அவன்
செயலும் மனமும் தூய்மையோடு
இருக்கும்!
இருந்திட வேண்டும்!
நற்றமிழ் பிரித்து எழுது ?
தனக்காக ,வாழ்பவன் மனிதனா அல்லது சமூதாயத்துக்காக வாழ்பவன் மனிதனா,,
அறத்தோடு வாழ்பவன் மனிதனா,
அறம் தவறி வாழ்பவன் மனிதனா,
அடுத்தவனை பழிசுமத்தி வாழ்பவன் மனிதனா,
மனித நேயத்துடன் வாழ்பவன் மனிதனா,
முகமூடி அணிந்து வாழ்பவன் மனிதனா ,
மனிதனாக பிறந்து மனிததன்மை இழப்பவன் மனிதனா,,,,
மனிதனாக பிறந்த அனைவரும் ,
வருங்காலத்தில் நான் மனிதன் இல்லை..என்று சொல்லும் நிலை வந்தாலும் ஆச்சரியம் இல்லை......