மருத்துவர்

பல்லாண்டு படித்து
பண்போடு திகழ்ந்து
பணம் தேடாது
பாலினம் பிரிக்காது
அறம் செய்து
அன்போடு ஆதரிக்கும் மகாதேவன்!

நோயை கண்டபின்
நேரம் நோக்காமல்
மனம் கோணாமல்
முகம் சுளிக்காமல்
தன் தேகநலம் அறியாது
இரவு பகலாய்
பிறர் உயிருக்காய்
உழைத்திடும் ஜீவன் அவனே!

அவனுக்கு
ஜாதி பெரிதல்ல
ஜனமே பெரிது!
மதம் தேவையில்லை
மானிட நலமே தேவை!


உடுத்தும் உடைப்போல் - அவன்
செயலும் மனமும் தூய்மையோடு
இருக்கும்!
இருந்திட வேண்டும்!

எழுதியவர் : Sara Tamil (1-Jul-19, 10:23 am)
சேர்த்தது : Sara Tamil
Tanglish : marutthuvar
பார்வை : 1008

மேலே