கனவுகளைக் கலைக்காதீர்

கையில் பத்து மாதக் குழந்தையுடன்
பத்து வயதுச் சிறுமி ஒருவர்
கண் நிறையக் கலைந்த கனவுகளுடன். குழந்தையைப் பார்த்துக் கொள்ளும்
அந்த வீட்டின் பணிப் பெண்ணாம்.
கனவு காணுங்கள்
உங்கள் கனவு நனவாகும் முன்
என்றுரைத்த ஐயா அப்துல் கலாம்
வாழ்ந்த பூமி இது.
கனவுகளைச் சுமக்கின்ற
குழந்தைப் பருவத்தின்
கனவை நனவாக்கும்
புண்ணியம் கூட செய வேண்டாம்.
கட்டிய கனவுத் தேன் கூட்டில்
கல்லெறியும் காரியத்தையாவது
கடந்து சென்றால் கூட
புண்ணியமாய்ப் போகும்.
நம் குழந்தைகள் மட்டுமல்ல
எல்லாக் குழந்தைகளும்
இந்த நாட்டின் தேசியச் சொத்து.