பிரிவு
பிரிவு !
வேதனையான விசயம்,
எல்லாவற்றிலும்
பிறந்தது முதல்
ஒவ்வொரு நாளும்
ஒன்றை இழக்கின்றோம்
விழித்து எழுந்தவுடன்
இன்றை நாள்
நம்மிடையே வந்து விட்டது
நேற்றைய நாள்?
நம்மை விட்டு பிரிந்து விட்டது,
நாட்கள் மட்டுமல்ல
எல்லாமே கூடத்தான்
வாழ்நாள் முழுவதும்
யாரும் நட்புடன் இருப்பதில்லை
துணைவி உட்பட !
உடல் உறுப்புக்கள் கூட
நாட்கள் செல்ல செல்ல
நட்பை முறித்து கொள்கின்றன
மருத்துவத்தின் மூலமே
சரி கட்ட வேண்டியுள்ளது
அவரவர் விதிப்படி
இல்லை சதிப்படி
நம் உடலை விட்டு
உயிரை பிரிந்து விடுகிறோம்
உலகத்துடன் பிரிவு
உடலுக்கா? உயிருக்கா?
உடலை எரித்தோ புதைத்தோ
உலகத்தை விட்டு
பிரித்து விடலாம்
ஆனால் உயிர் !