தலையணை பற்றி ஒரு கவிதை
🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮
*தலையணை.....*
படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮
கண்ணீர் காசுகளை
சேமித்து வைக்கும்
உண்டியல்......
அந்தரங்க சோகத்தை
கண்ணீர் துளிகளால்
இங்குதான்
கவிதை எழுதப்படுகிறது....
இது
வேர்வையில்
நனைந்ததை விட
கண்ணீரில் நனைந்தது தான்
அதிகம்...
படுக்கைப் போர்க்களத்தில்
இதுவே வாள் கேடயம்...
காதலிக்கு காதலன்
காதலனுக்கு காதலி....
இதைவிட ஒருவருக்கு
ஆறுதல் சொல்லிவிட
யாரலும் முடியாது.....,
படுக்கையில்
சாப்பிடுகின்றவருக்கு
இதுதான் டைனிங்டேபிள்...
லேப்டாப் பயன்படுத்துகின்றவர்களுக்கு
இதுதான் மேஜை...
தினமும்
தலையை சுமைக்கின்ற
நன்றி கடனுக்குத்தான்
இதை அவ்வப்போது
மடியில் எடுத்து
வைத்துக் கொள்கின்றார்களோ?
ரகசியங்களை
ரகசியமாக வைத்திருக்கும்
ரகசிய அறை....
மறந்தும் கூட
மற்றவர்களின்
தலையணையை
'அழுத்தி' விடாதீர்கள்
'கண்ணீர்' கசிந்து விடலாம்.... !
இதைப்.
பெண்கள் கட்டிப்பிடித்து
தூங்கும் போது சுகமாகும்....
இந்த ஆண்கள்
கட்டி பிடித்து தூங்கும்போது
என்னாகும்....?
குழந்தை சிற்றாற்றுக்கு
இதுவே இரு பக்கக் கரை....!
தலையைத் தாலாட்டி
தூங்க வைக்கும்
இன்னொரு தாய்மடி....!
எல்லோரும் தன் சோகத்தை இதனிடம் சொல்கிறார்கள்
இதனுடைய சோகத்தை
இது யாரிடம் சொல்லும்.....?
தண்ணீரைச் சுமக்கின்ற
பஞ்சே!
கனமாகி விடுகிறது
இது கண்ணீரையே சுமந்தும்
எப்படி
கனமாகாமல் இருக்கிறதோ ?
*கவிதை ரசிகன்*
🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮