புதுவையைப் புரட்டிய ஃபெஞ்சல் புயல்

வீறுகொண்ட வானம்
ரீங்கார பேய்க்காற்று
இடியும் மின்னலுமாய்
இயற்கையின் சீற்றம்
நிரம்பிய நீர் நிலைகள்
உடைபட்ட நீர்க்கரைகள்
ஊரெங்கும் கும்மிருட்டு
வீடெங்கும் நீர்ப்பரப்பு
மின் கம்பிகளுக்கு
கட்டாய ஓய்வு
அலைபேசியின் உயிரிழப்பு
இணையமும் துண்டிப்பு
நீரின்றி உணவின்றி
பசியும் பரிதவிப்பும்
வீதியெங்கும் மழை வெள்ளம்
வேரருந்த மரங்கள்
உயிரற்ற உடலாய்
மூர்ச்சையான ஊர்திக்குவியல்
வாழ்ந்த வீடும்
வெள்ளமதின் இரையாக
அரசின் படகில்
அகதியான தருணம்
கோரதாண்டவ
புயல் முகம்
முகமறியா
தெய்வங்களின்
உதவிக்கரங்களிலே
மனிதம் மட்டுமே வாழும்!
புதுவையின் வரலாற்றில்
புதியதோர் மழையளவு!
நாளைய பொழுது நலமுடன் மலர
நம்பிக்கை கொண்டே இணைந்து நிற்போம்
_*பாவலர். முனைவர். தேவ. கருணாகரன்*

எழுதியவர் : வீ ஆர் கே (2-Dec-24, 4:44 pm)
பார்வை : 14

மேலே