அன்பு சிறை

விதிஎன்னும் ஊஞ்சலில் - விளையாட்டு
பொம்மையாய் - நான்
துள்ளி குதிக்கும் முயலாய்
ஓட நினைத்தேன் - என் இரு கால்களையும்
துண்டித்தாய் - நீ
சிறகை விரித்து பறக்க நினைத்தேன்
சிறகை ஒடித்தாய் - நீ
கைகளை கால்களாக நினைத்து
நடக்க நினைத்தேன் - என் கைகளை
வெட்டினாய் - நீ
ஏன் உன் அன்பினால் என்
இதயத்தை சிறை பிடித்தாய் என்னை - நீ

எழுதியவர் : niharika (4-Jan-25, 1:01 pm)
சேர்த்தது : hanisfathima
Tanglish : anbu sirai
பார்வை : 67

மேலே