வாசனை மலர்

சிறுமொட்டு வழிவிட சிரிச்ச மொட்டு
சரமாகி விழிப்பிதுங்க வைக்கிறது பார்ப்போரை
கன்னியரும் கருவரை தெய்வமும் களிப்புறுவது
தன் தொண்டு பேசா வாயில்லா மலர்ச் செடி !

இடைவெளி பட்ட துன்பம் சற்றே நகர
பீடை விட்டு ஓடியது கற்றோர் தொட
மண்ணுக்கு மாசு படியா சோதனை
கண்காணிப்பு தலபுடல் போதனை …

மீண்டும் பூத்துக் குலுங்க சீர்வரிசை
பூண்டு புல் சேராதிருக்க கலை எடுப்பு
செயற்கை சத்து சேர்க்கா விரதம் ஏற்க
மாயமாய் திரும்பி வந்தது மலர் வாசனை !

எழுதியவர் : மு.தருமராஜு (3-Jan-25, 2:44 pm)
Tanglish : vasanai malar
பார்வை : 54

மேலே