பரதம் 16062025
நாகராஜன்...
வாழ்க்கை எனும் ஓவியம்
அது உனக்கு
பரதத்தில் பிடிக்கும் அபிநயம்..
அதைக் காண்பது பரவசம்...
உனது
கல்வி செல்வம் வீரம்..
அது சூரிய வெளிச்சம்..
விவேகம் தான தர்மம் பரதம்
அது பௌர்ணமி வெளிச்சம்..
கல்லூரி விழா... நாகராஜன்
நீ ஆடிய அழகிய பரதம்...
யாரும் சொல்லாமலேயே
அன்று உனக்கு சூட்டப்பட்டது
விழா நாயகன் மகுடம்...
மதுரை அரசாளும் மீனாட்சி..
அழகிய பாடலுக்கு உந்தன்
அற்புத அபிநயங்கள் இன்னும்
எந்தன் கண்களில்.. சலங்கை
சத்தம் என் காதுகளில்...
எல்லாம் அழகின் உச்சம்..
இன்றைய யூடியூப் பதிவுகள்
கூட இரண்டாம் பட்சம்...
உனக்குள் ஒரு ஈர்ப்பு விசை
அதன் சக்தியில் தடுமாறும்
புவியீர்ப்பு விசை...
பிறந்தநாள் வாழ்த்துகள்..
நண்பன் நாகராஜன்..
அன்புடன்...
ஆர். சுந்தரராஜன்.
🪷🌷👍🌹❤️