ரவி 16062025

சுடலையாண்டி ரவி...

இவன் ஆண்டு முழுவதும்
அன்புத் தென்றலாய்
வீசும் தென்னகத்தின்
தென்மேற்கு பருவக்காற்று...

அது வீசும் போதெல்லாம்
பொத்தி வச்ச அன்பு
மொட்டு பூத்து விரியும்..
பேசிப் பேசி ராசி ஆகும்..

நெடுநீர் மறவி மடிதுயில்
நான்கு கெடுநீரார்
காமக் கலன்கள்

தவிர்த்து

சொலல்வல்லன் சோர்விலன்
அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது..

சேர்த்து

எதிலும் நிதானம்
எல்லோரிடமும் அன்பு
சாந்தமான அணுகுமுறை
கடின உழைப்பு

கொண்டு வாழும்
நண்பன்.. அன்பன்
சுடலையாண்டி ரவிக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
👍🤝❤️😍🌹

எழுதியவர் : இரா. சுந்தரராஜன் (16-Jun-25, 10:42 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 26

மேலே