முத்தன் முத்தர் முத்தாளி
தம்பி போன மாசம் வரைக்கும் 'முத்தன்
மளிகை'ன்னு ஒரு கடை இருந்துச்சு. போன
வாரம்
பார்த்த போது 'முத்தர் மளிகை'னு பெயர்
பலகையிலே பேரு மாறி இருக்குது. என்ன
தம்பி இது?
@@@@@@@
முத்தன் 'ன்'னுல முடியற பேரா
இருக்கிறதால முத்தன் அண்ணனே தன்
பேரை முத்தர்னு மாத்திட்டாரு. பேருல
மதிப்பு இருக்குணும்னு. எல்லாம் அந்தப்.
பேரைக் கிண்டல் பண்ணீட்டு "என்னங்க
கடைக்காரரே, உங்க கடைகக்கு
வர்றவங்களுக்கு மளிகைப் பொருள்களை
முத்தமிட்டுத் தரப்போறீங்களா? அல்லது
சின்னப் பொண்ணுங்க சில்மிசம் பண்ணப்
போறீங்களா? சாக்கிரதை.
பொண்ணுங்களைத் தொட்டாக்கூட மூணு
வருசம் சிறையில சத்தான களி, அவிச்ச
வேர்கடலை சுண்டல் கெடைக்கும்.
சல்லிக்கல்லு ஒடைக்கணும்.
@@@@@@@@
தம்பி எனக்கு வயசு அறுபது ஆகுது. இந்த
வயசில் நான் அது மாதிரியெல்லாம்
செய்வேனா?
@@@@@
எழபது வயசு ஆனா தாத்தா எல்லாம்
பாலியல் குற்றத்த்தில் மாட்டி இருபது
வருசம் தண்டனை. நீங்ககீதும் மாட்டினா
இருபது வருச தண்டனையோட இரண்டு
இலட்சம் அபராதம். கட்டத் தவறினா
அதுக்குப் பத்து வருசம்.
@@@@@@
தம்பி, தம்பி எனக்கு என்ற குடும்பமும்
என்ற வேவாரமுந்தான் முக்கியம். நான்
இழிவான காரியத்தையெல்லாம்
செய்தமாட்டேன்.
@@@@@@@@
அப்பிடியா? மொதல்ல உங்க பேரையும்
உங்க கடைப் பேரையும் மாத்துங்க.
@@@@@@@
நீங்க அதிகம் படிச்சவரு. நீங்களே ஒரு
நல்ல பேரச் சொல்லுங்க தம்பி.
@@@@@@@@
நேற்று செய்த்தாள்ல ஒரு பேரைப்
பார்த்தேன். முத்தாளி. அந்தப் பேரு
உங்களுக்கும் பொருந்தும். முத்து +
முதலாளி = முத்தாளி. முத்தாளி மளிகைக்
கடை. இந்த விளக்கத்தைச் சொல்லுங்க
உங்கள யாரும் கிண்டல்
பண்ணமாட்டாங்க.
@@@@@@
ரொம்ப நன்றி தம்பி. சட்டபடி என்ற பேரை
மாத்தறதுக்கு என்ன செய்யணுமோ
அதைச் செய்யுங்க தம்பி.
சரிங்க அண்ணாச்சி.