வாழ்க்கை இனிக்குதையா…

வாழ்க்கை இனிக்குதையா…..!
02 / 12 / 2024

வாழ்க்கை இனிக்குதையா - இந்த
வாழ்க்கை இனிக்குதையா
பிறவிதான்
ஒருமுறை கிடைக்கும்
கிடைத்ததை ரசிக்கும்
ரசித்ததை ருசிக்கும்
ருசிச்சுதான் மயங்கும் - இந்த
வாழ்க்கை இனிக்குதையா

யாராரோ பொறந்துவந்து...ஊ
யாராரோ வாழ்ந்துவந்த
வாழ்க்கை சொகப்பட்டதே
இன்னும் பலப்பட்டதே
வாழ்க்கையை அனுபவிச்சா
சொகமாகுமே
நாளும் உன் வானில்
மழை பெய்யுமே
சிரித்து நீயும் மகிழ்ந்திருந்தா
சொர்க்கம் உன் வாசல் குடியேறும் - இந்த
வாழ்க்கை இனிக்குதையா

எத்தனை தடைகள் எத்தனை படைகள்
பாத்தாச்சு
எத்தனை கதைகள் எத்தனை வதைகள்
பட்டாச்சு
அத்தனை கேட்டு அத்தனை பட்டு
என்னாச்சு
வாழ்வின் அர்த்தங்கள் தெரிந்து
ஞானங்கள் புரிந்து தெளிஞ்சாச்சு
ஆதி நாளில் அறிவில்லாமல் அலைஞ்சாச்சு
காடு மலை குகையில் வாழ்வை தொலைச்சாச்சு
அடுத்து வந்த நாளெல்லாம்
அந்நியன் முன் கைகட்டி கும்பிட்டு வாழ்ந்தாச்சு
இந்த கால இளைஞ்சருக்கு
அடிமை சங்கிலி உடைபட்டு
அண்ணல் காந்தி அடிபட்டு உதைபட்டு
வாங்கித்தந்த
இந்த வாழ்க்கை இனிக்குதையா
சுதந்திர வாழ்க்கை இனிக்குதையா

( "காதல் கசக்குதய்யா....." பாடலுக்கு என் வரிகள் )

எழுதியவர் : ஜீவன் ( மகேந்திரன் ) (2-Dec-24, 7:34 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 38

மேலே