முட்களின் பரிவு
முட்களின் பரிவு
எங்கும்
முட்களாய் நிறைந்திருக்கும்
காட்டு புதர்கள்
அதனுள்ளே வரிசையாய்
அமர்ந்திருந்த
பட்டாம்பூச்சிகள்
அதை சுற்றி சுற்றி
வந்து உல்லாசமாய்
பறந்து கொண்டும்
அமர்ந்து கொண்டும்
பார்த்த மனமோ
பதைபதைக்கிறது
அதன் மெல்லிய
சிறகுகள் குத்தி
கிழிந்து விடுமோ?
பட்டாம்பூச்சிக்கு
முட்களின் மீது
நம்பிக்கை இருக்கிறது
முட்களுக்கும்
பட்டாம்பூச்சிகளின்
மீது பரிவு இருக்கிறது
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
