இயற்கையே இறைவன்

🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞

*இயற்கையே*
*இறைவன்*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞

சூரியனுக்கு
பெரிய மனசுதான்
இல்லையெனில்
ஒளியை
நிலவுக்கு கொடுத்திருக்குமா ..?

அலைகளுக்கு
தன்னம்பிக்கை அதிகம் தான்
இல்லையெனில்....
கரையை அடைந்திருக்குமா...?

அருவிக்கு
துணிச்சல் மிகுதி தான்
இல்லையென்றால்
மலையிலிருந்து குதித்திருக்குமா?

வானத்திற்கு
கருணை மனம் தான்
இல்லையெனில்
காசு வாங்காமல்
தண்ணீரைக் கொடுத்திருக்குமா..?

மண்ணுக்கு
பொறுமை குணம் தான்
இல்லை என்றால்
தோண்டும் போது
சும்மா இருந்திருக்குமா...?

காற்றுக்கு
அன்புள்ளம் தான்
இல்லையென்றால்....
கண்டவருக்கெல்லாம் உயிர்வளியைக்
கொடுத்து இருக்குமா...?

நெருப்புக்கு
தியாகம் குணம் தான்
இல்லையென்றால்....
தன்னையே
சுட்டுக்கொண்டு
வெப்பத்தை கொடுக்குமா..?

தண்ணீருக்கு
தாய் பாசம் தான்
இல்லையெனில்
தன்னை இழந்து தாகம் தீர்க்குமா.?

இயற்கையிடமிருந்து
பெற்றுக்கொள்ள
மட்டுமல்ல
கற்றுக் கொள்ளவும்
நிறைய இருக்கிறது....

*கவிதை ரசிகன்*

🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞

எழுதியவர் : கவிதை ரசிகன் (30-Mar-25, 10:15 pm)
Tanglish : iyarkaiye iraivan
பார்வை : 11

மேலே