தமிழ் தேமல் இல்லை
தமிழ் தேமல் இல்லை
************************
தேமல், இங்க வாடா கண்ணு?
@@@@@@
தேமல் யாருங்க?
@@@@@@@
தேமல் எம் பையன் தான்.
@@@@@@@
என்னங்க பெத்த பிள்ளைக்குப் போயி
தேமல்னு பேரு வச்சிருக்கிறீங்க?
@@@@@@@@
வடக்க 'தோமல்'னு பேரு வச்சிருக்கிறாங்க.
அவுங்களைப் போயி "ஏன் தோமல்'னு
பேரு வச்சிருக்கிறீங்க"னு கேட்டுப்
பாருங்களே.
@@@@@@@
இல்ல. நீங்க தமிழரா இருந்துட்டு.....
@@@@@@
நிறுத்துங்க. தமிழ்ப் பேருங்களைப்
பிள்ளைங்களுக்கு வச்சா நம்மள எந்தத்
தமிழ்ன்யா மதிக்கிறான். எல்லாம் அவுங்க
பிள்ளைகளுக்கு இந்திப் பேருங்களை
இல்லன்னா இந்தி மாதிரி உள்ள
பேருங்களை உருவாக்கி வச்சுக்கறாங்க.
எனக்கும் தமிழன்ங்கிற தன்மானம்
இருக்குதுங்க. அதனால் தான் இந்திப்
பேரு மாதிரி உள்ள 'தேமல்'ங்கிற பேரை
உருவாக்கி எம் பைய்னுக்கு
வச்சிருக்கிறேனுங்கோ.
@@@@@@@@
அப்ப தேமல் சுவீட்டு நேமுங்க.
@@@@@@