கொஞ்சுவது சினம்
#கொஞ்சுவது சினம்
கொஞ்சும் சினத்தில்
மிஞ்சிடும் அன்பும்
ஊடல் பின்னலில்
காரியம் ஆற்றிடும்
நங்கையின் சினமெல்லாம்
அன்பினில் கரைந்திடும்..!
கால்கள் நடமிடும்
கைகள் பறக்கும்
அடம் பிடித்தலில்அடக்கம்
மழலையின் சினமும்..!
குழந்தை சினத்தில்
கொஞ்சல் அதிகம்
வேண்டும் பொருள் அது
கை சேரும்பொழுதுதினில்
மழலை சினமெல்லாம்
மாறிடும் கணத்தில்..!
புரிதல் பிழையாய்
போகின்ற நாளில்
துளிர்த்திடும் பிணக்கும்
வளர்த்திடும் சினமும்..!
பிணக்குகள் ஊடே
ஒட்டிய சினமும்
மௌன நீட்டலில்
நர்த்தனம் ஆடிடும் ..!
நர்த்தன சினத்தினை
நயமாய் தணித்திடும்
ஆற்றல் படைத்தது
கொஞ்சல்.. கெஞ்சல்...
சினத்தின் மீது
கொஞ்சல் களிம்பை
சிறிதே தடவு
விடமும் அமுதென
மாறிடல் அழகு..!
#சொ.சாந்தி