Group 1
எவரின் அனுதாபத்திலும் வாழ்ந்து விடாதே!
உடலில் உயிருள்ளவரை கர்ஜித்து கொண்டே இரு,
வாழ்ந்தாலும் சாய்ந்தாலும் தோற்றேன் என்று ஏற்றுக்கொள்ளாதே!
தோல்வியை ஏற்றுக்கொண்டவன் முயற்சியை விட்டுவிலகிவிடுவான்,
ஒவ்வொரு தோல்வியும் ஒரு ஆசான்,
தோற்றுக்கொண்டே இருந்தாலும் அதில் கற்றுக் கொண்டவை வெற்றியைத் தேடிதரும்,
தயங்காதே! தனி ஒருவனாய் போராடு,
போராடித் தோற்றவரையெல்லாம் இவ்வுலகம் போற்றிக்கொண்டு தான் இருக்கிறது... போராடு....
- அருள்செல்வன்