சாக்லேட் தினக் கவிதை
🍫🍬🍫🍬🍫🍬🍫🍬🍫🍬🍫
*சாக்லேட் தினம் இன்று*
படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
🍫🍬🍫🍬🍫🍬🍫🍬🍫🍬🍫
ஏழைகளின்
பிறந்தநாள் கேக்....
மகிழ்ச்சியான
வெற்றிகரமான
செய்திகளை மட்டுமே
சுமந்து வரும் பத்திரிக்கை....
இது
குழந்தைகளின் முகத்தில்
சிரிப்பாகும்....
மருந்துக் கடையிலும்
மளிகைக் கடையிலும் "சில்லறையாகும்.....!"
"சுதந்திர தினத்தால்"
என் நாட்டு மக்களுக்குக்
கிடைத்தது
ஒன்றே! ஒன்று
இந்தச் "சாக்லேட்" மட்டும்தான்...
இதைப் பிடிக்காது என்று
சொன்னவர்கள்
இதுவரை
மண்ணில் பிறக்கவில்லை....
இனிமேலும்
மண்ணில்
பிறக்கப் போவதுமில்லை....
பூலோகத்தில்
பாக்கெட்டில் விற்கப்படும்
அமுதமாகும்....
இளம் பெண்களை அடிமையாக்குவதில்
"மன்மதன்" கூட
இதனிடம்
தோற்றுதான் போனான்....
எல்லா இனிப்பும்
டஜன் கணக்கில் இருக்கும்..
ஆனால்
இதற்கு மட்டும் தான்
'வகைகளே' ஒரு டஜன்
இருக்கிறது....!!
இதனுடைய
பிறந்த நாளை கொண்டாடுகிறார்களோ
இல்லையோ ...?
இது மற்றவர்களின்
பிறந்தநாளை
சிறப்பாகக் கொண்டாடும்....
கடித்த வாய்க்கும்
இனிப்பைத் தரும்...
இதைக் கொடுப்பவருக்கு
அன்பைப் பெற்றுத் தரும்....
அளவோடு இருந்தால்
ஆரோக்கியம்....
அளவுக்கு மீறினால்
நோய்.....
வாழ்க்கையில் எப்போதும்
இதை விரும்பும் நாம்
இதைப்போல்
வாழ்வதற்கு என்று
விரும்பப் போகிறோம்.....?
*கவிதை ரசிகன்*
🍫🍬🍫🍬🍫🍬🍫🍬🍫🍬🍫