மனிதம்

காலம் பொழுதெனக் கடக்கிறது
வருடங்கள் புயல் போல்மறைகிறது
இருந்தும் மனிதன் மாறவில்லை
போட்டியும் பொறாமையும்
லஞ்சமும் வஞ்சமும் கஞ்சத்தனமும்
விளைகிறது விளைந்து கொண்டே
மனித மனங்களை ஆட்டிபடைக்கிறது
அழ;கிய உலகை ஆசையுடன் வாழ்ந்து
அனுபவிக்க போதும் என்ற மனமில்லையே
அறிவில் ஆற்றலில் அன்பில் பண்பில்
உயர்வில் உத்தமன் மனிதன்
உன்னதமாய் வாழ உயர் பண்பில் வாழ
மறுக்காதே மறக்காதே மேன்மையில்
மனிதம் என்றும் நிலைக்கும்

எழுதியவர் : பாத்திமா மலர் (29-Nov-24, 5:19 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : manitham
பார்வை : 39

மேலே