நன்றி சொல்லும் தினம் பற்றி ஒரு கவிதை

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*நன்றி சொல்லும் தினம்*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

இன்று
தானாக
நன்றி சொல்லும் பழக்கம்
"நாய்யிடம்"மட்டுமே
இருக்கிறது.....
பெரும்பாலான மனிதர்களிடம்
மலையேறி விட்டது.....!!!

நன்றி சொல்லும்
நல்ல பழக்கம்
நாகரிகத்தின்
மணிமகுடம்.....
பண்பாட்டின்
தலைமை பீடம்........!!!

உதவி
கேட்கத் தெரிந்த வாய்க்கு
நன்றி சொல்ல
தெரியாமல் போய்விடுகிறது....
தவறாமல்
உதவி பெற்ற கரங்கள்
நன்றி செலுத்த
தவறிவிடுகிறது.......!!!

உயிர் கொடுத்து
உருவம் கொடுத்து
உதிரத்ததைப்
பாலாகக் கொடுத்து
உழைப்பைப்
பணமாகக் கொடுத்து
கல்வி கொடுத்து
அன்பு கொடுத்து
அரவணைப்பு கொடுத்து
இல்வாழ்க்கையைக் கொடுத்து
வாழ வைத்த
உங்கள் பெற்றோருக்கு
நன்றி சொல்லுங்கள்......

தட்டிக் கொடுத்து
தன்னம்பிக்கையைக் கொடுத்து
படிப்பு கொடுத்து
பட்டம் கொடுத்து
அறிவுரை கொடுத்து
அறிவு கொடுத்து
மனிதனாக்கிய
உங்கள் ஆசிரியர்களுக்கு
நன்றி சொல்லுங்கள்.......

கைக்கொடுத்து
ஆறுதல் கொடுத்து
ஆனந்தம் கொடுத்து
உறவாக வந்த
உங்கள் நண்பர்களுக்கு
நன்றி சொல்லுங்கள்

நாயாகப் படைத்து
நடுத்தெருவில் விடாமல்
பன்றியாகப் படைத்து
சேற்றில் விடாமல்
பாம்பாகப் படைத்து
பாவத்தில் விடாமல்
மனிதனாகப் படைத்து
பகுத்தறிவோடு
விட்டதற்கு
தெய்வத்திற்கு
நன்றி சொல்லுங்கள்......

உண்ணுவதற்கு உணவும்
உடுத்துவதற்கு உடையும்
இருப்பதற்கு இடமும்
பயன்படுத்துவதற்கு
கருவிகளும் கொடுத்த
தொழிலாளர்களுக்கு
நன்றி சொல்லுங்கள்....... !!!

வெயிலில் காய்ந்தும்
மழையில் நனைந்து
பனியில் உறைந்தும்
குளிரில் நடுங்கியும்
கன்னிவெடியில்
கைகால் இழந்தும்
துப்பாக்கித் தோட்டாவில்
உயிரிழந்தும்
குடும்பத்தை விட்டு பிரிந்தும்
ஆசைபாசங்களை இழந்தும்
அல்லும் பகலும்
தேசத்தைக் காக்கும்
இராணுவ வீரர்களுக்கு
நன்றி சொல்லுங்கள்........!!!

மலையளவு
கொடுத்தவர்களுக்கு
மட்டுமல்ல
திணையளவு
கொடுத்தவருக்கும்
நன்றி சொல்லுங்கள்......!!!

கையால் மட்டுமல்ல
வாயால்
உதவி செய்தவருக்கும்
நன்றி சொல்லுங்கள்......!!!

எங்கோ பிறந்து
எங்கோ வளர்ந்த
முன் பின் தெரியாமல்
திருமணத்தின் மூலமாக
துணையாகிய உங்களுடைய வாழ்க்கை துணைக்கு
நன்றி சொல்லுங்கள்....

"நன்றி" என்பது
வெறும் வார்த்தை அல்ல
அதுதான்
"மனிதத்தின் முகவரி.....!!!

*கவிதை ரசிகன்*


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

எழுதியவர் : கவிதை ரசிகன் (28-Nov-24, 10:00 pm)
பார்வை : 52

மேலே