தேடும் என்விழியின் தேவதைநீ

ஆடும் கொடிபோல் அசைந்திடும் பூங்கொடிநீ
வாடும் மலரின் வசந்தப்பூந் தென்றல்
மடல்விரி யும்தா மரைப்பூவின் மௌனம்
கடல்நீலம் உன்கணனோ சொல்

----இருவிகற்ப இன்னிசை வெண்பா

ஆடும் கொடிபோல் அசையும்நீ
வாடும் மலரின் வசந்தம்
தேடும் என்விழியின் தேவதைநீ
மாடி விட்டுகீழே வாநீ

ஆடும் கொடிபோல் அசையும்நீ
வாடும் மலரின் வசந்தம்நீ
தேடும் விழியின் தேவதைநீ
மாடி விட்டு இறங்கிவாநீ

---வஞ்சி விருத்தம் முறையே பல வாய்ப்பாட்டில்
மா மா காய் எனும் ஒரே வாய்ப்பாட்டில்

ஆடும் கொடிபோல் அசையும்நீ ஆடாமல்வா
வாடும் மலரின் வசந்தம்நீ வானவில்போல்வா
தேடும் விழியின் தேவதைநீ தேன்நிலவாய்வா
மாடி விட்டு மளமளவென் றிறங்கிநீயும்வா

----மா மா காய் தண்பூ எனும் ஒரே வாய்ப்பாட்டில் அமைந்த கலிவிருத்தம்
ஆடு வாடு தேடு மாடி -----எதுகை
ஆ அ வா வ தே தே ம ம -----1 ஆம் 3 ஆம் சீர் மோனை

தண்பூ பயன்பாடு :---
================
பொதுவாக பழைய தமிழ் நூல்களில் நாலசைச் சீர் பயன் படுத்தி
எழுதப்படுவதில்லை
மூவசைசீர் காய் முன் நேரசை வர தண்பூ வாகும்
இதுபூல் தண்நிழல் நறும்பூ போன்ற நாலசை சீர்களும்
உண்டு

ஆடாமல் வா ----நேர் நேர் நேர் தேமாங்காய் மல் நேர் = தேமாந்தண்பூ
வானவில்போல் வா --நேர் நிரை நேர் கூவிளங்காய் போல் நேர் = கூவிளந்தண்பூ
தேன் நிலவாய் வா ---நேர் நிரை நேர் கூவிளங்காய் வா நேர் =கூவிளந்தண்பூ
றிறங்கிநீயும் வா --நிரை நிரை நேர் கருவிளங்காய் வா நேர் = கருவிளந்தண்பூ

எழுதியவர் : கவின் சாரலன் (2-Dec-24, 11:14 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 39

மேலே