Aasiriyargal
ஆசிரியர்கள்
சிறியவர்களை உலகம்
ஆவென உயர்ந்து பார்க்கும் அளவிற்கு உயர்த்துவதால் இவர்கள் ஆசிரியர்கள்
ஆசான்கள்
அறியாமை எனும் புற ஊதா கதிரிடம் இருந்து மாணவர்களை காக்கும் ஓசோன்கள்
கருவறையில் நின்று வரம் கொடுக்காது வகுப்பறையில் நின்று வரம் கொடுக்கும் தெய்வங்கள்
புத்தகத்தைக் கொண்டு
நமக்கு புத்தான அகத்தை அளித்தவர்கள்
நூலைக் கொண்டு நம் வாழ்க்கையை வானில் பட்டமாய் பறக்க வைத்தவர்கள்
பென்சிலைக் கொண்டு பென்சிலை வடிக்க கற்றுக் கொடுத்தவர்கள்
பேனா மை கொண்டு
அதர்மம் பேணாமையை சொல்லிக் கொடுத்தவர்கள்
நீல மை கொண்டு நம் வாழ்க்கையின் நிலைமையை மாற்றியவர்கள்
பிரம்பை கையில் வைத்தவர்கள்
நாம் உயர பேரன்பை நெஞ்சில் வைத்தவர்கள்
பாடம் எனும் அறிவிப்பால் நமக்கு அறிவுப் பால் ஊட்டியவர்கள்
கணினி கொண்டு நம் வாழ்க்கையை கனியாக்கியவர்கள்
சீனப் பெருஞ்சுவராய் ஆசிரியர்களின் புகழ் நீண்டு இருக்கட்டும் இவ்வுலகை ஆண்டு இருக்கட்டும்
அதற்குத் துணையாய் இந்த ஆண்டு இருக்கட்டும்
உலகக் கவிஞர்கள் சங்கமம்