என்நிலை மறந்தேன்

புன்னகைக் கள்ளேந்தி பூவிதழ் விரித்தாள்
கன்னத்தில் பப்பாளி தேன்ரசம் பிழிந்தாள்
கிண்ணத்தில் வைத்த ரெட்டை மதுசாரம்
முன்னத்தில் தளம்பும் நடைபயின்று
வந்தாள்
அன்னத்தால் எனைமறந்தேன் எண்ணத்தால் நிலைகுலைந்தேன்



அஷ்றப் அலி

எழுதியவர் : ALA Ali (5-Sep-25, 3:06 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 33

மேலே