மா. அருள்நம்பி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : மா. அருள்நம்பி |
இடம் | : கூடங்குளம் |
பிறந்த தேதி | : 27-Aug-1963 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 02-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 254 |
புள்ளி | : 39 |
அர்த்தமுள்ள வார்த்தைகளிலும் அழகான தமிழ் எழுத்துகளிலும் கரைந்து காணமல் போனவன்.
என்னைத் தேடிக்கண்டுபிடிக்க முயன்று கொண்டிருப்பவன். அதனால் இன்னும் நான் ஒரு சராசரி மனிதன்தான்.
அறிவில் இன்னும் நான் மலராத மொட்டு.
வயதில் ஐம்பதைக் கடந்துவிட்ட தமிழ்ச் சிட்டு.
நற்றமிழ் பிரித்து எழுது ?
வழுக்கை
அன்பு நடமாடும் கண்களைக் கொண்ட அவள் சாலை ஓர இளநீர் கடைக்கு சென்றாள்.
இளநீர் ஒன்று வெட்டிக் கொடு என்றாள் .
கடைக்காரன் தண்ணிய வேணுமா? வழுக்கையா வேணுமா னு கேட்டான்.
வழுக்கையா ஒண்ணு வெட்டு என்றாள் .
அவன் சிரித்துக் கொண்டே இளநீரை வெட்டினான்.
வழுக்கையை கேட்டதற்கு அவன் ஏன் சிரித்தான் னு அவளுக்கு புரியல............
வெடிக்க கொடுத்ததும் வாங்கி கொண்டாள்.
'ஸ்ட் ரா ' கொடு என்றாள்.
கொடுத்தான்.
வாங்கிப் போட்டு உறிஞ்சினாள் ...
இளநீர் காலியானதும் கடைக்காரனிடம் கொடுத்தாள்.
கடைக்காரன் வாங்கி அந்த இளநீர்க் காயை இரண்டாக வெட்டினான்.
உள்ளே வழுக்கை லேசாக இருந்தது.
தனக்காக ,வாழ்பவன் மனிதனா அல்லது சமூதாயத்துக்காக வாழ்பவன் மனிதனா,,
அறத்தோடு வாழ்பவன் மனிதனா,
அறம் தவறி வாழ்பவன் மனிதனா,
அடுத்தவனை பழிசுமத்தி வாழ்பவன் மனிதனா,
மனித நேயத்துடன் வாழ்பவன் மனிதனா,
முகமூடி அணிந்து வாழ்பவன் மனிதனா ,
மனிதனாக பிறந்து மனிததன்மை இழப்பவன் மனிதனா,,,,
மனிதனாக பிறந்த அனைவரும் ,
வருங்காலத்தில் நான் மனிதன் இல்லை..என்று சொல்லும் நிலை வந்தாலும் ஆச்சரியம் இல்லை......
"வரம்"
"இல்லறம்" சிறந்திட
இதயத்து ஆசைகள் நிறைந்திட
இத்தனை வரம் வேண்டுமென்று
இறைவனிடம் வேண்டினேன் ....
அவனோ -
அதனை வரம்
அளிப்பதற்கு இல்லை ...
என்னிடம் இருப்பதோ
"துறவரம்" -
ஏற்றுக்கொள்வாய் பக்தனே
என்றான்.
மகளிர் தின வாழ்த்து….( புதுக்கவிதை) - மா.அருள்நம்பி
தமிழ் என்றால் என்ன?
மகளிர் தின வாழ்த்து….( புதுக்கவிதை) - மா.அருள்நம்பி
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு
இலக்கண விதிகளின் படி குறள் வெண்பாவில் அதிகபட்சம் இருக்கக்கூடிய 20 அசைகள்
இந்தக் குறளில் உள்ளன.
இவ்வாறு 20 அசைகள் உள்ள குறள் வெண்பா இது ஒன்று மட்டுமே என்பதாலும் , இது
கல்வியின் அவசியத்தைச் சொல்லுவதாலும் திருவள்ளுவர் கல்வி தான் தலையாயது என்று
சொல்வதாக நாம் எடுத்துக்கொள்ளலாமா?
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு
இலக்கண விதிகளின் படி குறள் வெண்பாவில் அதிகபட்சம் இருக்கக்கூடிய 20 அசைகள்
இந்தக் குறளில் உள்ளன.
இவ்வாறு 20 அசைகள் உள்ள குறள் வெண்பா இது ஒன்று மட்டுமே என்பதாலும் , இது
கல்வியின் அவசியத்தைச் சொல்லுவதாலும் திருவள்ளுவர் கல்வி தான் தலையாயது என்று
சொல்வதாக நாம் எடுத்துக்கொள்ளலாமா?
கடவுள் -நம்மைக்
கடந்தும் -நமக்கு
உள்ளேயும் இருப்பவர்.
கட + உள் = கடவுள் ...
ஆக- இச்சொல்லாய்
கடவுள் இருக்கிறார்...
நமக்கு உள்ளேயும் இருக்கிறார்
நமக்கு வெளியேயும் இருக்கிறார்..
மின்சாரத்தை
கம்பி வழியாக செலுத்தலாம்
விளக்கின் மூலமாக வெளிச்சமாகப் பார்க்கலாம் ...
தொட்டுப்பார்த்தால்
"ஷாக் அடிக்கும்" ...
வெளியே கடவுளை பார்ப்பதென்பது
விளக்கின் வெளிச்சம் பார்ப்பது போல் ...
தொட்டுப்பார்ப்பதென்பது -உள்ளே
கம்பி வழியாக செல்லும் மின்சாரத்தை
தொட்டுப்பார்ப்பதுபோல் ..
நீங்கள் கடவுளை
எப்படி பார்க்க விரும்புகிறீர்கள்?
உள்ளேயே? வெளியேயா!