தமிழ் பித்தன் தேவ் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  தமிழ் பித்தன் தேவ்
இடம்:  திண்டுக்கல்
பிறந்த தேதி :  28-Oct-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Dec-2017
பார்த்தவர்கள்:  82
புள்ளி:  4

என்னைப் பற்றி...

தனிமை நான் பெற்று வந்த வரம் பிறர் புரிந்துக் கொள்ளாமல் சென்றதால்...!!!

என் படைப்புகள்
தமிழ் பித்தன் தேவ் செய்திகள்
தமிழ் பித்தன் தேவ் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Sep-2019 10:44 am

யாரும் இல்லாத நேரத்தில்,
நான் இருக்கிறேன்..,
என வந்து ஒட்டிக் கொண்டது..,
இந்த தனிமை.!!!

மேலும்

தமிழ் பித்தன் தேவ் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Sep-2019 3:51 am

பிரம்மசரியத்தை துறந்து..,
இல்லறத்தில் வாழ
துணையாய் நீயே வா...
என் கண"பதி"யே...!!!

மேலும்

தமிழ் பித்தன் தேவ் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Sep-2019 3:48 am

தொப்புள்கொடி
உறவையையும் மறந்து
தாலிக்கொடி உறவுக்காக
தினமும் காத்துக் கொண்டு இருக்கிறாள்....
என் அக்கா.....!!!

மேலும்

தமிழ் பித்தன் தேவ் - Mohan அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Jun-2019 11:28 am

தனக்காக ,வாழ்பவன் மனிதனா அல்லது சமூதாயத்துக்காக வாழ்பவன் மனிதனா,,
அறத்தோடு வாழ்பவன் மனிதனா,
அறம் தவறி வாழ்பவன் மனிதனா,
அடுத்தவனை பழிசுமத்தி வாழ்பவன் மனிதனா,
மனித நேயத்துடன் வாழ்பவன் மனிதனா,
முகமூடி அணிந்து வாழ்பவன் மனிதனா ,

மனிதனாக பிறந்து மனிததன்மை இழப்பவன் மனிதனா,,,,

மனிதனாக பிறந்த அனைவரும் ,
வருங்காலத்தில் நான் மனிதன் இல்லை..என்று சொல்லும் நிலை வந்தாலும் ஆச்சரியம் இல்லை......

மேலும்

இன்றைய காலத்தில் ஏமாற்றி வாழத் தெரிந்தவன் பணக்கார மனிதன் ஏமாறி போய் வாழ்பவன் ஏழை மனிதன் இரண்டினையும் செய்பவன் அப்பாவி(களின்) மனிதன் 18-Aug-2019 4:39 am
உறுதி மனம் கொண்டு, பிறரை மதித்து,தன் மேல் நம்பிக்கை கொண்டு அன்பைத் தருபவனே உண்மையான மனிதன்! 16-Jun-2019 12:54 am
முகத்தில் அழுக்கு ,சாடுவதோ முகம் பார்க்கும் கண்ணாடியை ? "யார் மனிதன்?"என்பதை திருத்தி "நான் மனிதனா?" என்று வினாவி உங்களுடன் இணைத்து விடை தேடுகின்றேன் நான். வாழ்க்கை மீது உள்ள அதீத பற்றினாலும் , வாழ்க்கையின் நிற்சயமில்லா தன்மையினாலும்,வாழ்க்கையில் பாதுகாப்பு இன்மையாலும் ஏற்படும் பயத்தினால் தன்னுள் குழப்பமான குணாதிசயங்களை வளர்க்கின்றான் மனிதன்.என்று தனது உள்ளுணர்வை பின்பற்றி விருப்பு வெறுப்பைக் கடந்து தெளிவான மனதுடன் வாழ்க்கையை அதன் வழியில் முழுமனதுடன் ஏற்று அவனுள் உறைந்திருக்கும் பயத்துடன் சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடுகின்றானோ அன்று இதுவரை குரங்காய் இருந்தவன் தன்னுள் மனிதனை உணர்கின்றான். தன்னை தன் வாழ்வை முழுமையாக நேசித்து வாழும் மனிதன் நிட்சயமாக சகல எதிர்மறை சக்திகளையும் மனதார ஏற்று தன்னால் இயன்றவரை நேர்மறை எண்ணத்தால் நட்புறவு பேணி மனிதனாக வாழ முயற்சிக்கின்றான். சிந்தனைக்கு விருந்தாக அமைந்த உங்கள் வினாவிற்கு நன்றி. 05-Jun-2019 11:54 pm
தமிழ் பித்தன் தேவ் - நியதியின் கிறுக்கல் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jun-2019 10:10 pm

'உணர்ச்சி'

'உணர்வுகள் என்பது ஒரு நிகழ்வு முடிந்தபின் உணர்வு ரீதியாகத் தோன்றும் நிலைமையின் அகநிலை அனுபவம்' என்கிறது வலைத்தளம்.

ஆனால் ' உணர்ச்சி என்பது புலன்களின் தூண்டுதலால் அகநிலை அனுபவம்' என்கிறது என் சிற்றறிவு.

உதாரணமாக ஒரு பாடல் முதல் முறை செவியால் கேட்டு மனதின் ஆனந்த நிலையால் கண்கள் ஈரமானால் அது ஆனந்த கண்ணீர்.(உணர்ச்சி ).அதே பாடலை மீண்டும் மீண்டும் கேட்க்கும் பொழுது ஒவ்வொரு முறையும் கண்கள் ஈரமாவதில்லை.
தேன் முறுக்கை சுவைத்து முடிய மனதில் ஏற்படும் இன்ப உணர்ச்சி போல்,
பத்து தேன் முறுக்கை தொடர்ந்து சுவைத்தால் இந்த தேனின் இன்பமும் தெவிட்டிவிடுவது போல் உணர்ச்சி தெவிட்டவல்லது.

மேலும்

நன்றி🙏🙏 12-Sep-2019 10:56 am
தங்கள் அற்புதமான கருத்துக்கு நன்றி 18-Aug-2019 4:58 pm
நெருப்பு தொட்டால் சுடும் .. .இதில் சுடும் என்பதை எப்படி விளக்க முடியும் அதைப் போல் தான் உணர்வு என்பதை உணர்ந்தால் மட்டுமே உணர முடியும்.., (அதை எழுத்துக்களால் விவரிக்கத் தெரியவில்லை எனக்கு...) 18-Aug-2019 4:34 am
வணக்கம் கவின் சாரளன் ஐயா! காதலையும் காமத்தையும் அலசும் வயசும் அனுபவவும் என்னிடம் இல்லை . காதல் தான் உங்கள் பார்வையில் teenage fantasy ஆகி விட்டதே! இப்ப நாங்கள் மெய்யியல் பேசுவோமா ?அதற்காக தத்துவ புத்தகங்களை எடுத்து படி என்று கூறாதீர்கள். மொழியுணர்வு, தன்மானவுணர்வு , புத்துணர்வு, உள்ளுணர்வு, ஐயவுணர்வு போன்றவையை உணர்ச்சியில் இருந்து வேறுபடுத்தி நாம் நன்கு அறிவோம்.அத்துடன் நாம் தெளிய அறிவோம் மேற்கண்ட உணர்வுகளை மனித மனத்தால் கட்டுப்படுத்த முடியாது என்றும் உணர்ச்சிகளை மனித மனதால் கட்டு படுத்த முடியும் என்றும். PLS DO SHARE YOUR INTERESTING IDEAS ABOUT SUBTLE BODY (Consciousness,Intellect,Mind ,Ego) மகிழ்ச்சி! 16-Jun-2019 1:40 pm
தமிழ் பித்தன் தேவ் - தீப்சந்தினி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Aug-2019 9:58 am

திருமணமான பெண்ணிற்கு காதல் வருமா ?

மேலும்

அட கடவுளே.... அடுத்தவன் மீதும் காதல் வருகிறதே? 13-Feb-2020 11:44 pm
ஏன் வராது? 13-Feb-2020 11:41 pm
வர இயலாது என்று யாராலும் கூறிவிட முடியாது. 12-Sep-2019 9:53 pm
கட்டாயம் வரும், சிலருக்கு தங்களின் கணவர் மேல் காதல் வரும், சிலருக்கு தங்களின் அன்பை புரிந்து தன்மேல் அன்பு செலுத்தும் நபரிடம் காதல் வரும் , சரியான வாழ்க்கை புரிதல் இல்லாத நபர்களுக்கு உடல் அழகையும் போலியான புகழ்ச்சியும் உள்ளவர்கள் மேல் காதல் வரும்; முதலானது சிறப்பானது, அடுத்தது அடுத்ததாய் இருப்பதே நலமானது; இறுதியானது கொள்ளாமல் இருப்பது எல்லோருக்கும் நலமானது. இது புரிந்தால் வாழ்க்கை நலமாக இருக்கும் 03-Sep-2019 1:46 pm
தமிழ் பித்தன் தேவ் - Arasi அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Aug-2019 2:49 am

பெரும்படை இச்சொல்லை பிரித்து எழுதுக

மேலும்

பெரிய+படை 24-Aug-2019 7:44 pm
பெரும்படையைப் பிரிக்கக் கூடாது சிறு படை ஆகிவிடும் . பெரும் படை எதிர்ப்பதம் சிறு படையா சிறும்படையா ? பெருமை + படை = பெரும்படை அருமை + படை =அரும்படை கருமை + படை = கரும் படை வெறுமை +படை = வெறும் படை சிறுமை + படை = சிறும் படை தானே ? எருமை + படை = எரும்படைதானே ? அரசி என்ற பெயர் கொண்டதால் முதலில் படை பற்றி கேள்வி கேட்க வேண்டும் என்று எண்ணியிருக்கிறீர்கள் .நன்று . 18-Aug-2019 10:17 am
பெரிய+ படை= ெெபெரும்படை 18-Aug-2019 4:14 am
பெருமை+படை 17-Aug-2019 6:57 pm
மேலும்...
கருத்துகள்

மேலே