நியதி - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  நியதி
இடம்:  இங்கிலாந்து
பிறந்த தேதி :  13-Dec-1979
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  14-Sep-2018
பார்த்தவர்கள்:  322
புள்ளி:  59

என்னைப் பற்றி...

தெய்வ நம்பிக்கை தவறான நம்பிக்கை என்கின்றனர் மேதாவிகள் ,
இந்த 'தவறான நம்பிக்கையின்' உண்மைப் பொருள் தேடுகிறாள் பயித்தியம் ;

காதல் என்பது ஒரு இனிய சொப்பனம் என்கின்றனர் மேதாவிகள் ,
இந்த 'இனிய சொப்பனத்தில் ' உயிருடனல்லவா உயிர் உறவாடுகின்றது;

தேசிய உணர்வு ஒரு மாயை என்கின்றனர் மேதாவிகள் ,
ஈழக்குழந்தை கருவில் சிதைந்த பின்னரும் இந்த 'மாயை' உணர்வினால் ஏக்கத்துடன் ஒரு தாய்.

Facebook : https://www.facebook.com/chico.vivitha

என் படைப்புகள்
நியதி செய்திகள்
நியதி - நியதி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jun-2019 10:10 pm

'உணர்ச்சி'

'உணர்வுகள் என்பது ஒரு நிகழ்வு முடிந்தபின் உணர்வு ரீதியாகத் தோன்றும் நிலைமையின் அகநிலை அனுபவம்' என்கிறது வலைத்தளம்.

ஆனால் ' உணர்ச்சி என்பது புலன்களின் தூண்டுதலால் அகநிலை அனுபவம்' என்கிறது என் சிற்றறிவு.

உதாரணமாக ஒரு பாடல் முதல் முறை செவியால் கேட்டு மனதின் ஆனந்த நிலையால் கண்கள் ஈரமானால் அது ஆனந்த கண்ணீர்.(உணர்ச்சி ).அதே பாடலை மீண்டும் மீண்டும் கேட்க்கும் பொழுது ஒவ்வொரு முறையும் கண்கள் ஈரமாவதில்லை.
தேன் முறுக்கை சுவைத்து முடிய மனதில் ஏற்படும் இன்ப உணர்ச்சி போல்,
பத்து தேன் முறுக்கை தொடர்ந்து சுவைத்தால் இந்த தேனின் இன்பமும் தெவிட்டிவிடுவது போல் உணர்ச்சி தெவிட்டவல்லது.

மேலும்

வணக்கம் கவின் சாரளன் ஐயா! காதலையும் காமத்தையும் அலசும் வயசும் அனுபவவும் என்னிடம் இல்லை . காதல் தான் உங்கள் பார்வையில் teenage fantasy ஆகி விட்டதே! இப்ப நாங்கள் மெய்யியல் பேசுவோமா ?அதற்காக தத்துவ புத்தகங்களை எடுத்து படி என்று கூறாதீர்கள். மொழியுணர்வு, தன்மானவுணர்வு , புத்துணர்வு, உள்ளுணர்வு, ஐயவுணர்வு போன்றவையை உணர்ச்சியில் இருந்து வேறுபடுத்தி நாம் நன்கு அறிவோம்.அத்துடன் நாம் தெளிய அறிவோம் மேற்கண்ட உணர்வுகளை மனித மனத்தால் கட்டுப்படுத்த முடியாது என்றும் உணர்ச்சிகளை மனித மனதால் கட்டு படுத்த முடியும் என்றும். PLS DO SHARE YOUR INTERESTING IDEAS ABOUT SUBTLE BODY (Consciousness,Intellect,Mind ,Ego) மகிழ்ச்சி! 16-Jun-2019 1:40 pm
நன்றி ஐயா உங்கள் விஞ்ஞான வகுப்பிற்கு. 16-Jun-2019 12:01 pm
உடல் உள்ளம் ஒன்றுக்கொன்று complimentary என்று அறிவியல் சொல்லும் . உடல் ஒரு பயோ டெக் எஞ்சின் . இதை இயக்குவது மூளை . மூளைக்கு இரத்தத்தைத் செலுத்துவது இதயம் . இந்த ரத்தம் உருவாக்கப் படுவது இரைப்பையில் போடப்படும் உணவால் . இதயம் இரத்தத்தை மூளைக்குச் செலுத்தும் ஒரு பம்பிங் ஸ்டேஷன் , அவ்வளவே. உள்ளமும் உணர்வு காதல் என்பவை கவிஞர்கள் கற்பனையாளர்கள் இதயத்திற்கு கொடுத்த மிகைப்படுத்தப்பட்ட அடையாளம் . மூளை பற்றிய விளக்கங்களை வலையிலோ புத்தகங்களிலோ படித்த்துப் பாருங்கள் அறிவியல் காட்டும் அடையாளங்கள் புரியும். காம உணர்ச்சி ஆணுக்கோ பெண்ணுக்கோ மூளையில்தான் உருவாகிறது . புணர்ச்சியில் அதற்கு வடிகால் அல்லது திருத்தி கிடைக்கிறது. இந்த மனோவியல் காரணங்களை சிக்மண்ட் பிராய்ட் ஆராய்ந்து எழுதியிருக்கிறார் . முறையாக மணந்த பெண்ணிடம் கொள்ளும் புணர்ச்சியும் வேசியிடம் கொள்ளும் புணர்ச்சியும் வன் புணர்வால் கொள்ளப்படும் புணர்ச்சியும் அறிவியல் உடல் ரீதியாக புணர்ச்சியே . கரு பயோ பாக்டரால் உருவாகவே செய்யும் . ஒரு orderly society ---கட்டுக் கோப்பான மனித சமூக அமைப்பிற்கு முதலாவதான மணமுறைப் புணர்வை சாத்திரம் அல்லது சட்ட வழியிலான முறையில் ஏற்று மனிதன் விலங்கு மற்ற உயிரினங்களில் இருந்து வேறுபட்டு நாகரிக மனித இனமாக பூமியில் வாழ்கிறான். இதற்கும் மூளையில் அவன் சிந்தித்து உருவாக்கிக் கொண்ட moral code டே காரணம் . இதுவெல்லாம் எதற்கு என்று சொல்லும் அறிவுஜீவிதர்களும் இருக்கிறார்கள். தாஜ் மஹால் காதல் இதயம் கோவில் எல்லாம் teenagers poetic fantasy ! 16-Jun-2019 9:09 am
நியதி - கேள்வி (public) கேட்டுள்ளார்

நியதி - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jun-2019 1:17 pm

'பக்தி'

தன்னில் இறையை தேடி பயித்தியமாகி
தன்னில் இறையை உணர்ந்த பித்தனாகி
இறையை சகல ஜீவராசிகளிடதிலும் காணும் சித்தனாகி
பக்தியெனும் தேனில் மூழ்குவதல்லவா இறை நம்பிக்கை!

தெய்வீக ராகத்தில் இதயம் துடிக்க
வண்ணத்துப்பூச்சியாய் சிறகடித்து
நற்சத்திர தோழிகளுடன்
நிலவொளியில் போதை கொண்டு
சுற்றியாடி சுழன்று ஆடி களித்து
வேடிக்கை கதைகள் பலபேசி
கேளிக்கைகள் பல கண்டு
தன்னுள் மெய் தேட
பித்தனுக்கும் கூத்து பயித்திய கூட்டினுள்!

~ நியதி ~

மேலும்

நியதி - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jun-2019 11:03 pm

'ஆத்மஜோதி'

காம என்கின்ற மோகமும்
குரோத என்கின்ற கோபமும்
லோபம் என்கின்ற பேராசையும்
மத என்கின்ற வெறியையும்
மாத்ஸர்யம் என்கின்ற பொறாமையும்
ஜீவனை ஆட்டுவிக்கும் ஐந்து அசுர குணங்களான பஞ்சமா பாதகங்களையும்
ஜீவனை ஆளும் அன்னை சூலம் துணை கொண்டு துவம்சம் செய்ய
அன்பெனும் ஜோதியில் ஜீவன் ஒன்றென கலக்க
அம்மா காளி உணர்த்துவது யாதோ?!

~ நியதி ~

மேலும்

நியதி - அனிதா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Jun-2019 4:15 pm

அந்த காலம் முதல் இந்த காலம் வரை ஒரு பெண்ணிற்கு திருமணம் அவசியமான ஒன்றாகா எல்லோராலும் பார்க்க படுகிறது அது அந்த பெண்ணிற்கு விருப்பம் இல்லை என்றாலும் அது கட்டாயமாக்க படுகிறது அதையே நான் உங்கள் முன் வைக்க ஆசை படுகிறேன் எனக்கு ஒன்று விளங்கவே இல்லை ஆணோ பெண்ணோ அவர் அவர் வாழ்வில் திருமணம் வேண்டுமா வேண்டாமா என்பது அவர்கள் விருப்பம் தானே அதை ஏன் அவர்கள் விருப்பத்தையும் மீறி திணிக்கிறார்கள் அப்படி என்ன அவசியம் வந்தது திருமணத்தில் என்னுடைய கேள்வியும் அதுவே ஒரு பெண்ணின் வாழ்வில் திருமணம் என்பது அந்த அளபுக்கு முக்கியமா கொஞ்சம் சொல்லுங்கள் தோழர்களே ........

மேலும்

வணக்கம் தோழர் இங்கு யார் தேர்ந்தெடுப்பது என்ற ஒரு நிர்பந்தம் இல்லை நமக்கு விருப்பம் இல்லாத திருமணம் என்ற பந்தத்தில் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த பெண்ணின் உணர்வுகளுக்கு ஏன் முற்று புள்ளி வைக்கிறார்கள் 14-Jun-2019 8:54 pm
தோழர் உங்கள் கருத்தினை நான் ஏற்கிறேன் நான் அனைத்து பெண்களுக்கும் பேச வில்லை எந்தன் கேள்வி வேண்டாம் என்று சொன்னாலும் அவர்களிடம் இந்த பந்தத்தினை திணிக்க நினைக்கிறீர்கள் அதுவே நான் இப்படி ஒரு கேள்வி எழுப்ப காரணம் உங்கள் பதில்களுக்கு நன்றிகள் தோழர்... 14-Jun-2019 8:50 pm
உங்கள் சுயவிவர பக்கத்தில் மூன்று பெரிய மனிதர்களை வேட்டியை மடித்துக் கட்டி தமிழ் அடையாளத்துடன் காட்டியிருக்கிறீர்கள் . இன்டெரெஸ்ட்டிங் . மூவரும் மணம் முடித்தவர்கள் . இவர்கள் இது பற்றி சொல்லியிருக்கக் கூடும். தன் வருமானத்தில் வாழ்கிற ஆண் பெண் சிலர் தற்காலங்களில் திருமணமின்றி தனியாகவே வாழ்கின்றனர் . தாய் தந்தையர் வருமானத்தில் வாழ்கிற பெண்கள் எத்தனை நாட்கள் அவர்களை சார்ந்து வாழ முடியும் . அவர்களுக்கு பின் இவள் கதி ? யோசிக்க வேண்டாமா ? திருமணம் செய்து கொள் என்று வலியுறுத்துவதற்கும் பிக்காதவனை திருமணம் செய்து கொள் என்பதற்கும் வித்தியாசமிருக்கிறது. ஒரு கட்டுக் கோப்பான சமூக அமைப்பிற்கு சாத்திர வழியோ சட்ட வழியோ திருமணம் முக்கியமே . ஒரு பெண் தனக்குத் திருமணம் வேண்டாம் என்று தீர்மானித்தால் அது அவளின் தனிப்பட்ட விருப்பம். அத்தகைய பெண் நிர்பந்தத்திறகாக ஒருவனை மணந்தால் அந்த ஆணின் வாழ்க்கை நாசமாகும் . இத்தகைய பெண்கள் மணமுடித்த இல்லற வாழ்க்கையிலோ தாம்பத்தியத்திலோ குழந்தை பெற்று குழலுக்கும் யாழுக்கும் அப்பாலான மழலை இன்ப மகிழ்ச்சியிலோ விருப்பமில்லாதவர்கள் .சமூகச் சேவை செய்யலாம் நன்றே ! உலகில் இப்படி ஆண் பெண் இருவருமே தீர்மானித்துவிட்டால் HUMAN RACE WILL BE EXTINCT FROM THE SURFACE OF THE EARTH IN NEAR FUTURE ! மறுபடியும் ஆப்பிரிக்க குரங்குகள் பரிணாம வளர்ச்சி அடைந்தால்தான் பூமியில் மனிதனைக் காணமுடியும் . 14-Jun-2019 4:54 pm
வணக்கம் அனிதா! பெற்றவள் அன்பு ஆயுள் முழுக்க நிலைத்து நிற்காது. தாய்க்கு தாயாகவும் தோள் சாய தோழனாகவும் துணைவர நிரந்திரமாக திருமண பந்தத்தில் தான் முடியும் . மௌனராக மோகன் போல் ஒருவரை உங்கள் பெற்றார் உங்களுக்கு தெரிவு செய்ய அதை நீங்கள் மறுப்பது துரதிஷ்டம் தானே . அதனால் தயவு செய்து பெற்றோர் தெரிவு செய்பவரை வாழ்வின் நாயகனாக்க பரிசீலனை செய்யுங்கள் . இதயம் கனிந்த வாழ்த்துக்கள்! 13-Jun-2019 10:13 pm
நியதி - நியதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Jun-2019 11:57 pm

சாயி நீயே நிரந்தரம்

"நீ உன் சுமைகளை என்னிடம் பகிர
நான் உனக்கு சிறகுகள் தந்து மகிழ
கணம் கணம் என்னைச் சுற்றும் பட்டாம்பூச்சியானாய் நீ "
என்று உயிரைப் பார்த்து சிறுநகை பூக்கின்றார்
உயிரின் ஆன்மீகப் பயண வழி தோழன்
சாயி கிருஷ்ணா தோள்களில் சிலுவையுடன்!

~ நியதி ~

மேலும்

நன்றி ஐயா உங்கள் கருத்திற்கும் ஆசிக்கும் 🙏🏾 12-Jun-2019 1:58 pm
இறைவன் ஒன்றே அவனைக் காண்போர் கண்ணில்தான் அவன் தோன்றுவது வேறு வேறாய் கண்ணனின் சகோதரி நீ சிலுவையைக் கண்டது உன் பரந்த மனப்பான்மையை எனக்கு காட்டியது இறைவனுக்கு எது மதம் அவன் மதங்களுக்கு அப்பாற்பட்டவன் -மதப்பூசல் மனிதன் உண்டுபண்ணுவது சாத்திரம் இதையேதான் கூறுகிறார் ! ஆசிகள் வாழ்த்துக்கள் 12-Jun-2019 1:36 pm
நன்றி ஐயா . உங்கள் கருத்தின் ஆழம் புரிகின்றது. ஆனால் நான் ஒரு bipolar butterfly! என் 'கற்பனை நட்புறவாம்' கண்ணன் என்று என் உற்றாரும் சுற்றாரும் உறுதிப்படுத்த 'இருந்துட்டு போகட்டுமே' என்று நான் என் கற்பனையை தொடர; என் இதயம் கண்ணன் இசைக்கும் புல்லாங்குழலாக தெய்வீக இசையில் உயிரின் உள்முகப் பயணம் ; கண்ணன் அழகு கிரீடம் மயில் இறகை உரிமையுடன் பறித்து புத்தியில் ஞானக்கண்ணாக்க பரவசத்தில் உயிரின் புனித தேடல் ! #பித்தனின்பிதட்டல்கள் நான் பேசுவது மதம் அல்ல ஆன்மீகம் என்பது என் நம்பிக்கை. நான் இங்கு எந்த மதங்களையும் இழுக்கவில்லை.அதற்க்கு என்னிடம் அறிவும் இல்லை தகுதியும் இல்லை. என் கற்பனைக்கு சுவைசேர்க்க நான் அவ்வப்போது சாயி கிருஷ்ணாவையும் , புத்தரையும் , காளியையும் துணைக்கு அழைப்பதுண்டு . I am not religious ; am only spiritual. 'என் சிலுவையை (மனச் சுமையை )சுமக்கின்றான் என் கண்ணன் உரிமையுடன் ' என்று மட்டுமே குறிப்பிட்டுளேன் என்று தாழ்மையுடன் தெரிவிக்கின்றேன். மகிழ்ச்சி . 12-Jun-2019 11:22 am
சகோதரி, கண்ணனின் தொழில் சிலுவையைக் ஏற்றி யேசுவைக் காண்கின்றாய், இதுபோல சிலுவையில் கண்ணனைக் கண்டுகொள்வோர் பெருகினால் மதங்களின் மதம் மறையும் சமரசம் நிலவும் உலகில் அருமையான கருத்து வாழ்த்துக்கள் சாய் ராம் 12-Jun-2019 10:10 am
நியதி - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jun-2019 1:38 am

"வேண்டாம் போதி"

இசையை பக்தியுடன் காதலித்தேன்
மனக்கண்ணில் கிருஷ்ணா பித்தனாக;
நிசப்தத்தை நேசத்துடன் காதலித்தேன்
மனக்கண்ணில் கிருஷ்ணா புத்தனாக;
ஆத்ம மந்திரத்தை வேதமென காதலித்தேன்
மனக்கண்ணில் கிருஷ்ணா மனிதனாக;
என் மன்னனை முழுமையாக காதலித்தேன்
அவன் சொல் மிக்க மந்திரமில்லை ;
"வேண்டாம் காதலுடன் போதி " என்றான்
"வேண்டும் காதலில் ஜோதி " என்றேன்;
வயோதிபத்தின் வாசலில் பக்தி பெருக
நித்தமும் தேடுகிறேன் என்னை என் கிருஷ்ணனுள்!

~ நியதி ~

( Love makes life divine)

மேலும்

பலநாள் முயன்று எழுதும் கவிதை வரிகள்
படிப்போரின்றி வீணே தாளில் ஒன்றிப்போக
அப்போதுதான் அந்த வினாடியில் கிறுக்கிய
அர்த்தமில்லா காதல் பிதற்றல்கள் அதை
படித்து இன்புற்று ஒரே நாளில் கோடி கோடி
ரசிகர்களை உலகின் பலகோடியிலிருந்து சேர்க்கும்
காதலிடம் நான் தோற்றுப்போனேன் இந்த' காதல்'

மேலும்

அருமையான கருத்து கவி கந்தன் அவர்களே மிக்க நன்றி 13-Jun-2019 7:44 am
என் கவிதையை அலசி படித்து நயமான கருத்து தந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே அவுடியாப்பன் வேலாயுதம் 13-Jun-2019 7:43 am
நயமான நியாயமான காதல் தோல்வி ! 13-Jun-2019 12:51 am
கற்பனையா ! காதல் அனுபவங்கள் ! அந்தநாள் ஞாபகம் வந்ததே ! காதல் மலர் மாலை நறுமணம் வீசட்டும் ரதி மன்மதன் சிலைகள் காண தென்காசி ,நெல்லை கிருஷ்ணாபுரம் போவோம் 12-Jun-2019 7:57 pm

இன்பமெல்லாம் கண்டு
களித்தாயிற்று-துன்பம்
யாவும் தெளிந்தேன்
இன்னும் காண்பதற்கேதும் இல்லையே
என்றான் நண்பன்..... நான் கேட்டேன்
'பேரின்பம் கண்டாயா நீ என்று

மேலும்

Thanks ever so much Sir for your precious time to translate this respected knowledge the eternal truth.Very hard vocabulary to digest in my brain.Will try to absorb the essence at its core.Thanks again. 08-Jun-2019 7:11 pm
here is the English version of my tamil poem on 'Life' please read it and give your comments " I have indeed enjoyed almost everything in life And have also had experienced sufferings unbound, so what more should I strive for in this World tell me my friend' said my friend to which I said' My friend you sure seem to have seen all joy and sorrow, but then my friend there is yet one thing in this world that is just Joy and joy alone and that never inflicts any sorrow even perforce you enjoy it in wild abundance ... that is 'self-redemption' or moksha , which you can enjoy till you live as mortal in this world and for which all you 've to pay is ', self-denial' and shed vanity me have ye experienced this , the heaven on Earth my friend , to which my friend replied not but stared at me in total astonishment 08-Jun-2019 4:49 pm
அழகிய தத்துவக் கவிதை! 20-Feb-2019 12:50 pm
நியதி - சிவநாதன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-May-2016 6:59 pm

கள்ளிச் செடியும்
முளைக்க மறுக்கும்
கருமை படர்ந்த
கந்தக மண்ணில்
துள்ளி எழுந்து
விழுந்த அலைகளின்
துயரை சொல்ல முடியாது
மெல்ல அசையும் நந்திக் கடல்

வெள்ளி முளைக்கும்
அந்திக் கருக்கல்
அவலப்பட்ட இனமொன்றின்
தலையில் கொள்ளி விழுந்த
நாளைக் கூறும்.

அள்ளி அவன் அன்று
வீசிய குண்டில்
காயம் பட்ட நிலவொளி
நள்ளிரவைக் கூட
பகலாய் எரிக்கும்.

கண் எட்டும் திசை எங்கும்
மண் திட்டியாய்க்
கிடக்கும் புதைகுழிக்குள்
புதையுண்டு கிடக்கின்ற
உறவுகளின் இறுதி மூச்சு
வீசும் காற்றில்
உஷ்ணமாய் தெரியும்.

செங் குருதி நீர் கலந்த
சேற்றுக் கடற் கரையில்
வேர் அறுந்து போன
விட

மேலும்

நியதி - யோகபாலாஜி க அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Oct-2018 10:02 pm

அரசு பொதுத்தேர்வில் மாணவிகள் முதலிடம்!
ஆசிட் வீச்சில் மாணவிகள் மரணம்!
பல கலைநிகழ்ச்சிகளில் மாணவிகள் முதலிடம்!
ஒருதலைக்காதலால் மாணவிக்கு அரிவாள் வெட்டு!
"மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா"-இது உண்மைதானா?
மாதவம் செய்து மங்கையராய்ப் பிறந்தால் சேதாரமாக்கிச் சிதையில் சேர்க்கிறார்கள்!
உரிமைகளுக்காகப் போராடினால் சிறையிலும் சேர்க்கிறார்கள்! நேர்கொண்ட பார்வைகள் குருடாகிப் போகின்றன,
வரதட்சணை கொடுமை என்னும் கூர்வாள்களால்!
நிமிர்ந்த நன்னடைகள் முடங்கிப் போகின்றன,
மதங்களெனும் பிரிவினை ஆயுதங்களால் !
"பெண் விடுதலை பெற்றுள்ளோம்"- இது பொய்!
நீதி கேட்டு வழக்கில் உள்ளன விடுதல

மேலும்

வீழ்ந்தால் முத்தெடுப்பீர்! வாழ்ந்தால் கரைசேர்வீர்! _ நம்பிக்கை தரும் வரிகள். பெண்களின் சகல துன்பங்களுக்கும் அவள் தான் காரணம்.பெண்ணானவள் முதலில் தன் உள்ளுணர்வை நம்ப வேண்டும்.உள்ளுணர்வு வேண்டாம் என்றால் அதன் சொல்வழி கண்டிப்பாக பெண்ணானவள் நடக்க வேண்டும்.எதிர்பாலினரை புரிந்து கொள்வதில் தாயாகவும் அறிவில் சுடராய் ரௌத்திரம் பழகி அவள் இருக்கும் இடத்தில் எந்த அசம்பாவிதமும் அவளை நெருங்காது.அத்துடன் இங்கே ஆண்கள் ஏன் தவறாக போகிறார்கள் என்று அவதானித்தால் அதற்கும் பெண்ணைத்தான் நோக வேண்டி உள்ளது.பெண் அழகாய் இருப்பது அவள் தவறல்ல , ஆனால் கவர்ச்சிபொருளாய் அவளை காட்டிக்கொள்வதே அவள் தவறு.கர்ப்பத்தில் இருந்து நற்சிந்தனையை குழந்தைகளுக்கு விதைப்பதும் பெண்மையை மதிக்கும் மனப்பக்குவத்தை உருவாக்குவதும் ஒழுக்கத்தை கற்று கொடுப்பதும் ஒரு தாயின் பொறுப்பான சமூக கடமை.ஒவ்வொரு தாயுமே எந்த ஒரு பெண்ணின் கண்ணீருக்கும் காரணமும் பொறுப்பும். உணரட்டும் பெண்கள் தங்கள் பலவீனங்களை தமிழ் மகன் உங்கள் கவிப்புரட்சியினால்! 08-Oct-2018 12:52 am
நியதி - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Mar-2015 11:46 am

பார்த்த முதல் நாளில்
இதயம் பறிபோகவில்லை
பஞ்சும் நெருப்பும் என
பற்றிக் கொள்ளவும் இல்லை

பஞ்சம் பிழைக்க வந்தேன்
தஞ்சம் நீ கொடுத்தாய்
தாரம் எனும் வரம் கொடுத்து
தாயாக மாற்றி வைத்தாய் .

தரணியில் சேய் வாழ தன்னையே
அர்பணித்தாய்
சுயநலம் கொண்டவர்கள் துரத்தி
ஒதுக்கிவிட

தோழனாய் தோள் கொடுத்தாய்
சுகமாய் சுமந்து கொண்டாய்.
காமமற்ற காதலினை காலம் கடந்து கற்றுக் கொண்டேன் .

தள்ளாடி நடந்தேன் தாங்கிப் பிடித்தாய்
சோர்ந்து நின்றேன் தலைகோதி
புத்துணர்வு தந்தாய் .

போதும் பதியே
போகும் நேரம் நெருங்குகின்றது
உன் நெஞ்சோடு என்னை அணைத்துக்கொள்
இந்த நிலையில்லா உலகில்
என்னை நிஜமா

மேலும்

நன்றி நன்றிகள் . 02-Nov-2015 12:12 pm
நன்றி நன்றிகள் . 02-Nov-2015 12:10 pm
அடடா தோழி..காதல் வழியுது போ. 31-Mar-2015 10:38 am
தோழனாய் தோள் கொடுத்தாய் சுகமாய் சுமந்து கொண்டாய். காமமற்ற காதலினை காலம் கடந்து கற்றுக் கொண்டேன் . ஆம் உண்மை காதல் உணரும் தருணம் அதுவே... அழகு தோழமையே.... 29-Mar-2015 11:08 pm
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (2)

இவரை பின்தொடர்பவர்கள் (2)

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே