வாழ்க்கை- தத்துவம்

இன்பமெல்லாம் கண்டு
களித்தாயிற்று-துன்பம்
யாவும் தெளிந்தேன்
இன்னும் காண்பதற்கேதும் இல்லையே
என்றான் நண்பன்..... நான் கேட்டேன்
'பேரின்பம் கண்டாயா நீ என்று
அது யாதோ என்றான் அவன்
அதற்கு நான் கூறினேன்
நண்பா, இன்பம் துன்பம் இவ்விரண்டும்
கடந்த நிலை அது , அங்கு
இவ்விரண்டும் இல்லை காண் என்றேன்
அதுவே வீடுபேறு , இந்நிலையில்
மண்ணிலே விண்ணைக் காணும் நிலை அதுவே
என்றேன்......... நண்பன் என்னைப்பார்த்து
ஸ்தம்பித்து நின்றான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-Feb-19, 4:10 pm)
பார்வை : 566

மேலே