உணர்வுகளை உண்ணும்

உணர்வுகளை உண்ணும் ...

சுயநல சுகம் காண
சூழ்நிலை
தன்வசப்படுத்தும்
பொல்லாத மிருகங்கள்
மனித உருவில்

உணர்வறியா சின்னஞ்சிறு
சிறுமிகளை
சிதைக்கும் சீர்கெட்ட ஜென்மங்கள்

கல்வி சாலைகளில்
களவி தேடுது
காதல் போர்வையில்
காமம் தேடுது
கள்ளக்காதலில் துரோகம்
முளைக்குது
உறவுகளில் உண்மை எங்கே ?

பாலுணர்வு மேலெழும்புது
பாசம் நேசம் எல்லாம்
புதைக்கப்பட்டு

ஆசை ஒன்றே குறிகோளாய்
தசை தேடும்
கள்ளர்கள் இருக்க

எங்கே நம்பிக்கை
விதைப்பது
ஆங்காங்கே முளைத்திருப்பது
முட்களே

காயப்படுத்தாமல் இருக்க
நம் பாதைகளில்
பார்த்துதான் தடம் பதிக்க வேண்டுமன்றோ

மனம் அது திருந்தாவிட்டால்
தண்டணைகள்
என்ன செய்யும் ?

எழுதியவர் : த பசுபதி (19-Feb-19, 3:08 pm)
சேர்த்தது : பசுபதி
பார்வை : 269

மேலே