கண் சிமிட்டும் நேரம்தான்

கண் சிமிட்டும் நேரம்தான்...
05 / 09 / 2025

விடிந்ததும்
கண் விழித்தால்
புது ஜனனம்
கண் மூடினால்
அது மரணம்.
கண் சிமிட்டும்
நேரமதில்
எதுவும் நடக்கலாம்
எதுவும் கடந்தும்
போகலாம்.
நம் வாழ்வே
கண் சிமிட்டும் நேரம்தான்.
விழித்திருக்கும்
நேரம்தான்
நம் நேரம்
நல்ல நேரம்.
எதை செய்ய வேண்டுமோ
அதை அப்போதே
செய்துவிட வேண்டும்.
விட்டால்
எல்லாம் முடிந்துவிடும்.

எழுதியவர் : ஜீவன் ( மகேந்திரன் ) (5-Sep-25, 8:53 am)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 54

மேலே