ரசிகன் ஹரி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ரசிகன் ஹரி |
இடம் | : ஊத்துக்கோட்டை,திருவள்ளூர |
பிறந்த தேதி | : 25-Jun-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Apr-2019 |
பார்த்தவர்கள் | : 229 |
புள்ளி | : 11 |
தமிழை நேசிப்பவன்...
தமிழால் பெண்மையை கிறுக்க ஆசை படுபவன்....
தனிமையோடு வாழ்பவன்....
காதலை காதலிப்பவன்....
இயற்கையை ரசிப்பவன்...
காற்றை போல்
தேடலோடு அலைபவன்.....
கருத்துக்களும் இல்லை...
இலக்கணமும் பிழை.....
ஆனாலும் அழகு....
.......மழலையின் பேச்சு.....
நீ விதைத்தது என்னவோ
காதல் விதை தான்💕, ஆனால் வளர்ந்ததோ கல்யாண ஆசை👫🏻, காத்திருக்கிறேன் அந்த மூன்று முடிச்சிக்காக💏
என் பிஞ்சு விரல்களால்
நான் பிடித்து எழுதிய
என் முதல் எழுத்தாணி
பென்சில் ...
என் எழுத்துக்கு
முத்தான முகவரி
நீ தந்தாயே ...
அன்று தொடங்கிய எழுத்து
இன்று வரை தொடர்கிறது ..
இனியும் தொடரும்…
ரௌத்திரம் பழகு
நீ குளிர்ந்த நிலவு
நீ அழகு மலர்
நீ தாகம் தீர்க்கும் நதி
நீ இருள் அகற்றும் ஜோதி
நீ சுமை தாங்கும் பூமி
என்று பார் புகழ் பாட
மதி மயங்கி
உனக்கு நீயே அடிமை சாசனம்
எழுதும் பெண்ணே...
நீ நற்சத்திர வழிகாட்டி
நீ வைராகியத்தின் பிறப்பிடம்
நீ தூய்மையான நீரூற்று
நீ ஞான ஒளி
நீ அனற்குழம்பு
என்று உணர்ந்து ரௌத்திரம் பழகு!
~ நியதி ~
என் தனிமை நிரந்தரமானது..... காரணமோ???
அதில் அவள் வருகை சுகமானது...
அதிலும் என் வாழ்க்கையின் தேடல் அழகானது....
இதனால் தான் தனிமை எனக்கே எனக்கானது....
-by ரசிகன் ஹரி
தனிமையோடு இருக்கும் எனக்கும் ஒரு பேராசை தான் நிலவே... அழகான உன்னில் என்னை தொலைத்துவிட்டு மேகங்கள் போல் உன்னை சுற்றி சுற்றி என்னை தேட வேண்டும் என்று.... -by ரசிகன் ஹரி
என் நண்பனிடம்,
நான் சிரித்துப் பேசியதைக் காட்டிலும்
அதட்டிப் பேசியதே அதிகம்!!
அவனிடம்,
சிரித்துப் பேசுபவர்கள் அவனுடைய
நண்பர்களும் இல்லை!
அதட்டிப் பேசிய நான் அவனுடைய
எதிரியும் இல்லை!
இப்படிக்கு,
என்றும் உங்கள் நட்பை எதிர்பார்க்கும்,
தமிழச்சி.
ஒரே ஒரு வரம் கொடு...
உன் தோள் சாயும் தோழியாக...!
உன் கண்ணோடு கண் பேசும் காதலியாக...!
உன் மார்போடு கட்டித் தழுவும் மனைவியாக...!
நீ என் மடி மீது துயிலும் உன் அன்னையாக...!
ஒரே ஒரு நாள் மட்டும்,
உன்னோடு வாழ வரம் கொடுடா...!!
காற்றோடு காற்றாக கரைந்து,
நீ சுவாசிக்கும் சுவாசமாக மாறி,
உனக்குள் நுழைந்து உன் உள்ளத்தை லேசாக வருடிடமுடியாதா அன்பே ....
பெண் என்பவள் உடலாலும் உள்ளத்தாலும் மிக மிக மென்மையானவள் தயவு செய்து அவளை காயப்படுத்தாதீர்கள்.