அகிலா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : அகிலா |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 17-Oct-2018 |
பார்த்தவர்கள் | : 466 |
புள்ளி | : 107 |
HURT ME WITH THE TRUTH BUT NEVER COMFORT ME WITH A LIE
உன்னுடன் நடக்கும்போது ,
நடையில் ஒரு வேகம்
துள்ளும்,
கண்ணில் ஒரு திமிர்த்தனம் தெறிக்கும்,
குரலில் ஒரு ஆண்மை
வலுக்கும்,
இதழ்க் கடையில் ஒரு குறுநகை துளிர்க்கும்,
விரல் நுனிகள் உன்
கை கோர்க்கத் தயாராகும்.
Akhila
அன்பெனப்படுவது,
சுயத்தைத்
தொலைத்து
உன்னோடு தொலைந்துபோவது.
புதிதாகப் பழகும் ஒவ்வொருவருடைய முகச்சாயல் யாராவது ஒருவரை நினைவுபடுத்திக் கொண்டு தான் இருக்கின்றன
அகிலா
நெருங்கி வரும் உன்
காலடி சத்தத்தில்
என் காதலும்
விலகி ஒடும் என்
காலடித் தடத்தில்
உன் வெறுப்பும
என் கண்களை
வறலாமல்
பார்த்துக்
கொள்கிறது
அகிலா
நெருங்கி வரும் உன்
காலடி சத்தத்தில்
என் காதலும்
விலகி ஒடும் என்
காலடித் தடத்தில்
உன் வெறுப்பும
என் கண்களை
வறலாமல்
பார்த்துக்
கொள்கிறது
அகிலா
முத்தமிட்டு
முற்றுப்புள்ளி
வைக்கச் சொன்னேன்
நீயோ
புள்ளிவைத்து
கோலம் போடுகிறாய்
அகிலா
ஒரு நட்ப்பைக்
கடந்துவிடலாம்
ஒரு வெறுப்பைக்
கடந்துவிடலாம்
ஒரு கோபத்தைக்
கடந்துவிடலாம்
ஒரு பகையைக்
கடந்துவிடலாம்
ஒரு துரோகத்தைக்
கடந்துவிடலாம்
ஒரு ஏளனத்தைக்
கடந்துவிடலாம்
ஒரு சோகத்தைக்
கடந்துவிடலாம்
ஒரு அழுகையைக்
கடந்துவிடலாம்
ஒரு சிரிப்பைக்
கடந்துவிடலாம்
ஒரு சண்டையைக்
கடந்துவிடலாம்
ஒரு சஞ்சலத்தைக்
கடந்துவிடலாம்
ஒரு துயரத்தைக்
கடந்துவிடலாம்
ஆனால்
ஒரு மௌனத்தைக்
கடப்பதென்பது
கடினமாகவே
உள்ளது
அகிலா
நான் உன் தேவதையாக
இருக்கவேண்டாம்
நான் உன்
தேவையாகவே
இருக்கவேண்டும்
அகிலா
சில மௌனங்கள்
நிம்மதியைத் தருகின்றன
சில மௌனங்கள்
ஆறுதல் தருகின்றன
சில மௌனங்கள்
சந்தோஷத்தைத் தருகின்றன
சில மௌணங்கள்
எரிச்சலைத் தருகின்றன
சில மௌனங்கள்
சம்மதத்தைத் தருகின்றன
சில மௌனங்கள்
எதிர்ப்பைத் தருகின்றன
ஆனால்
பெரும்பாலும்
மௌனங்கள்
குழப்பத்தை மட்டுமே
தருகின்றன
அகிலா
மழைக்கு கூட பள்ளிக்கூடம்.....
பக்கம் ஒதுங்கியதில்லை....
உன் நினைவுகளுக்காக...
ஒதுங்குகிறேன் ....
நீ சென்ற இடமெல்லாம்