ப செந்தில்பிரபு - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ப செந்தில்பிரபு |
இடம் | : COIMBATORE |
பிறந்த தேதி | : 24-May-1983 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 14-Feb-2017 |
பார்த்தவர்கள் | : 2625 |
புள்ளி | : 123 |
எனக்குள் ஒரு கவிஞன்
புது மனையின்
திருஷ்டி
கழிக்கப்பட்டது
மனைப்பத்திரம்
வங்கியில்
அடமானம்
வைக்கப்பட்டபோது
மழலையே
உன் பிஞ்சு பாதங்கள்
மண்ணில் பட்டு
மெல்ல நடை
பழகும் போது
பூமி தாய்
முத்த மழையினில்
நனைகிறாள்
சத்தம் இல்லாத முத்தம் ..
-------------------------------------------
சத்தம் இல்லாது முத்தம் கொடுத்திட
நானென்ன
வெத்து வேட்டா - அட
யுத்தம் போலொரு
முத்தம் வெடித்ததில்
இதயம் இரண்டும்
ஒன்றாகிப் போச்சா !
ஆழமாய்க் கொடுத்த ஆசை முத்தத்தில்
அண்ட பேரண்டமெலாம்
ஆட்டங்காணுதா!
நிலை தடுமாறிய பூமி தென்வடலாய்ச் சுற்றத் தொடங்குதா
இளஞ்சூரியன் தென்திசையில்
மெல்ல எழுந்ததா!!
-யாதுமறியான்.
தூணிலும்
துரும்பிலும்
எங்கும்
நீ
பசியிலும்
பட்டினியாலும்
மட்டும்
நான்
என் முதல் கவிதைப் புத்தகம் வெளியிட ஊக்கம் அளித்த எழுத்து.காம் இணையதளத்திற்கும், அதன் சக கவிஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..
உலகில் உனக்கு மட்டும்
தான் வலி வலி என்று புலம்பாதே..!!
காயம் படாமல் சுவற்றில்
கூட சித்திரம் வரைய முடியாது..!!
ஏன் கல் கூட
சிலையாக முடியாது..!!
வாழ்க்கை உன்னை
பதப்படுத்த சில வலிகளை
ஏற்றுத்தான் ஆக வேண்டும்..!!
வலி தாங்காமல் எந்த ஒரு ஓலையும் சுவடுகள் ஆவதில்லை..!!
காயங்களை உடம்பில் ஏற்று வலியை மனதில் ஏற்று
எதையும் கடக்க முடியும் உன்னால்
என நீ நம்பு முதலில்..!!
என் முதல் கவிதைப் புத்தகம் வெளியிட ஊக்கம் அளித்த எழுத்து.காம் இணையதளத்திற்கும், அதன் சக கவிஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..
அவளுக்கு
தயாரானது மேடை
எனக்கோ பாடை
அவள் மணவறையில்
நானோ பிணவறையில்
மலர்கள்
இருவர் மீதும்
விழுந்தன
மாலை
இருவர் கழுத்திலும்
மேளம்
இருவருக்கும் முழங்கியது
கூட்டம்
இருவருக்கும் கூடியது
ஊர்வலம்
இருவருக்கும்
நடனம்
இருவர் முன்பும்
ஆடினார்கள்
அவள் முன்
தீப்பொறி தூண்டினார்கள்
என் முன்
பொறியை தூவினார்கள்
அவளுக்கு மகுடம்
ஏறியது
என் மண்குடம்
ஊறியது
கூறையோடு அவள்
தாரை யோடு நான்
அவள் காலில் மெட்டி
ஏறியது
என் தோளில் வரட்டி
ஏறியது
அவள் விளக்கு ஏற்றினால்
என்னையே விளக்காக ஏற்றினார்கள்
அவளின் அறையில்
மின் விளக்குகள் எரியவில்லை
நான் எரிந்து கொண்டு இரு
வியர்வைத் துளியையும்
கண்ணீர்த் துளியையும்
தனக்குள் வைத்துக் கொண்டு
தன் பிள்ளைகளுக்கு
பன்னீர்துளிகளை
தெளித்து வளர்ப்பவர் அப்பா...
சொர்க்கத்தில் நிச்சயித்து
இருந்தும் கூட
இரு மனம் இணைய
தரகர் மனம் திறக்கவில்லை
கமிஷன் கட்டுப்படியாகததால்
தென்னையின் கீற்றுகள்
அடக்கி ஒடுக்கப்பட்டு
தலை சாய்க்கபட்டது
மின்கம்பம் தலை நிமிர
பல மனிதர்களும் அப்படித்தான்...
நிலத்தை உழுது
விதை விதைத்து
நீர் பாய்ச்சி களை எடுத்து
உரம் இட்டு
விளைந்ததை
அறுவடை செய்து
லாபம் நஷ்டம் எது என்றாலும்
தை திருநாளை கொண்டாடுகிறோம்
தாய் போன்ற நிலத்திற்கு நன்றி கடனாக ...
படையல் இடுகிறோம்
உழைப்பின் களைப்போ மூடுபனியின் விறைப்போ
கதிரவன்
துள்ளி எழுந்து வர
படையல் இடுகிறோம்
எங்களின் உயிர் நாடியான
கால்நடைகளை குளிப்பாட்டி
வண்ணங்களை
வானவில்லாக மாலையிட்டு
கரும்பு மாவிலை தோரணம் கட்டி
அதன் இடத்தில் பொங்கலிட்டு
அன்னம் இட்டு
தமிழ்ப் பாரம்பரியம் போற்றி
எங்கள் கடவுளே உன்னை வணங்குகிறோம் தை திருநாளில்..