விவசாயியின் பொங்கல் விழா அழைப்பிதழ்

நிலத்தை உழுது
விதை விதைத்து
நீர் பாய்ச்சி களை எடுத்து
உரம் இட்டு
விளைந்ததை
அறுவடை செய்து
லாபம் நஷ்டம் எது என்றாலும்

தை திருநாளை கொண்டாடுகிறோம்

தாய் போன்ற நிலத்திற்கு நன்றி கடனாக ...
படையல் இடுகிறோம்

உழைப்பின் களைப்போ மூடுபனியின் விறைப்போ
கதிரவன்
துள்ளி எழுந்து வர
படையல் இடுகிறோம்

எங்களின் உயிர் நாடியான
கால்நடைகளை குளிப்பாட்டி
வண்ணங்களை
வானவில்லாக மாலையிட்டு
கரும்பு மாவிலை தோரணம் கட்டி
அதன் இடத்தில் பொங்கலிட்டு
அன்னம் இட்டு
தமிழ்ப் பாரம்பரியம் போற்றி

எங்கள் கடவுளே உன்னை வணங்குகிறோம் தை திருநாளில்..

எழுதியவர் : senthilprabhu (15-Jan-20, 7:48 am)
பார்வை : 5379

மேலே