உம் பொண்ணுக்கு கறி வெறிடா
மகனே மனோசு, நீ கல்யாணம் பண்ணீட்டு
வெளிநாட்டுக்குப் போயி பதினோரு
வருசம் கழிச்சு குடும்பத்தோட நம்ம
ஊருக்கு வந்திருக்கிற. உம் பொண்ணு
ரொம்ப அழகா இருக்குறாடா. அவ பேரு
என்னடா மனோசு?
@@@@@@
ஹரிபிரியா.
@@@@@@
என்னது கறிப்பிரியாவா? அது தான்
பேருக்குத் த்குந்த மாதிரி தெனம்
கறிக்/ கோழிக் குழம்பு, கறி/கோழி
பிரியாணி, கறி/கோழி வறுவல் இதுல
ஏதாவது (இ)ரண்டாவது இருந்தாச் சோறு
திங்கறா. இதென்னடா கறி வெறி இது?
@@@@@@
அம்மா எம் பொண்ணுப் பேரு 'ஹரிபிரியா'.
கறிப் பிரியா இல்ல. உனக்கு 'ஹ'வைச்
சரியா உச்சரிக்க முடியல. இது சாமி பேரு
அம்மா.
@@@@@@@
நான் என்னத்தடா கண்டேன். இவ தெனம்
கவிச்சை இல்லாம சோறு திங்கிறதில்லை.
கறிமேல பிரியமா இருக்குறவனு
பேருக்குத் தகுந்த மாதிரி
இருக்க்குறதுன்னு நெனச்சுகிட்டேண்டா
மனோசு..