இந்தப் படை போதுமா

இந்தப் படை போதுமா?
-----------------------------------------

தலைவர்:

டேய் துப்பேஷு, நம்ம போராட்டத்துக்கு

ஆள்திரட்ட போன நம்மக் கட்சியின்

கொள்கை பரப்புச் செயலாளர்

வந்துட்டாரா?

@@@@@@

வந்துட்டாருங்க ஐயா. ஐநூறு பெண்களை

அழைச்சிட்டு வந்துட்டாருங்க.

சந்தைப்பேட்டை மைதானத்தில்

அவுங்களுக்கு ஒலிபெருக்கி மூலம்

"இந்தப் படை போதுமா, இன்னும் கொஞ்சம்

வேண்டுமா"னு ஒரே சமயத்தில்

சொல்லவும் நம்ம கட்சியின் கொடியை

எப்படி உயர்த்தி ஆட்டவேண்டும், ஊர்வலம்

போகும்போது இன்னும் என்னென்ன

சொல்லவேணும்னும்

பயிற்சி அளிச்சிட்டு இருக்கிறார். காலை

எட்டு மணியிலிருந்து பயிற்சி நடக்குதுங்

ஐயா.

@@@@@@

சரி. ஊர்வலம் பத்து மணிக்கு. மணி இப்ப...

@@@@@

ஒன்பதரைங்க ஐயா.

@@@@@@@@

நம்ம போராட்டம் வெற்றியா தோல்வியானு

இன்னிக்கு எல்லா


தொலைக்காட்சிகளிலும் விவாதம்

நட்த்துவாங்கடா துப்பேஷு.

@@@@@@@

ஆமாங்க ஐயா. நம்ம கட்சிக்கு நல்ல

விளம்பரம் கெடைக்குமுங்க ஐயா. உலகத்

தமிழர்கள் எல்லாம் பார்ப்பாங்க ஐயா.

@@@@@@

இப்படிப் போராட்டம் நடத்தித்தாண்டா

நம்ம கட்சியை வளர்க்கணும்.

எழுதியவர் : மலர் (3-Jan-25, 6:36 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 29

மேலே