ஒரு சந்தேகம்

⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️

*ஒரு சந்தேகம்*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️

பெண்ணே!
"ஒவ்வொரு விசைக்கும்
சமமான
எதிர்வசை உண்டு" என்று
நியூட்டன் சொன்னது
உண்மைதான்
ஆம்....!
நான் பார்க்கும்போது
நீ பார்ப்பதில்லை......

நீ நிலவு என்று
நான் சொல்வது
உன்னை மயக்க அல்ல.....
சூரியனாய் இருக்கும்
எனக்கு
நீ துணைக்கோளாய்
வருவதற்குத்தான்.....

"பூமி எல்லா
பொருட்களையும்
தன் மையத்தை நோக்கி
ஈர்க்கும்" என்று
நியூட்டன் சொன்னதை
என்னால்
ஏற்க முடியவில்லை
என்னை ஈர்ப்பது என்னவோ
நீ தான் ......!!!

நீ என்னில் நிகழ்த்தியது
'இயற்பியல் மாற்றம்' அல்ல
'வேதியியல் மாற்றமமே !
அதனால்தான்
என்னால் மீண்டும்
பழைய நிலைக்கு
வர முடியவில்லை......

ஒத்த துருவங்கள் தான்
ஒன்றை ஒன்று விளக்கும்
நாம்
எதிர் எதிரி துருவங்கள் தானே
ஏன் விலகுகிறாய்.....?

*கவிதை ரசிகன்*

⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️

எழுதியவர் : கவிதை ரசிகன் (1-Jan-25, 9:57 pm)
Tanglish : oru santhegam
பார்வை : 20

மேலே