வெண்புறா ஒன்று

வெண்புறா ஒன்று விரித்தது வெண்சிறகை
விண்நீல வான்திரையில் வெண்ணிற ஓவியமாய்
வண்ணப் பறவையின் வெள்ளை அழகினில்
எண்ணமெல்லாம் நீல எழில்
வெண்புறா ஒன்று விரித்தது வெண்சிறகை
விண்நீல வான்திரையில் வெண்ணிற ஓவியமாய்
தூயயெழில் வெண்பறவை தூவிய எண்ணத்தில்
பாயுது நெஞ்சில்வெண் பா