திறந்து வா

சக்தியே! என் பக்தியை மெச்சி நீயும் தரிசனம் தருவாயோ?
கடைசி வரை கண்டும் காணாது செல்வாயோ?
முக்தி தரும் உனது அன்பு வேண்டியே
நடையாக நடக்கிறேன் உன் பின்னாடியே!

அடி முல்லையே! புத்தி மயக்கிய கள்ளியே!
சேறு போல கழுவினால் போகாது என் காதலே!
செடி என்று அதை பிடுங்கி எறியவும் முடியாதே!
மறுபடியும் உன்னையே நேசிப்பென் என் சுவாசக் காற்றே!

கண்ணைச் சிமிட்டி வசியம் செய்த சீமாட்டியே!
சிட்டுக் குருவியாய் சிரகடிச்சு பறக்கிறேனே!
மண்ணைக் கவ்வும்படி செய்து விடாதே!
பொட்டு வச்சு சிலுக்கி குலுக்கி கிறக்கிப் போறவளே!

அன்பு செய்தால் பதிலுக்கு அன்பை தானே
எதிர்பார்த்தேன்; புரியவில்லையா உனக்கு அசடாட்டம்
என்னை புலம்பவச்சு போகிறாய் பொன்மணியே!
புதிர் போதும் இத்தோட நிறுத்திக்குவோமே!

பொதையில நானும் உலறவில்லையே; புதுவசந்தம்
உன்னை நாளும் எண்ணி என் மனம் புத்துயிர் பெறுகிறதே!
பாதை மாறாமல் இலக்கை நோக்கி நானும் பயணிக்க
நின்னையே துணைவர வேண்டுகின்றேனே காலமெல்லாம்.

காத்திருக்கின்றேன் உன் பதிலை வேண்டியே!
தென்றல் வந்து செவிதனில் சொல்லுமோ!
சாத்திதான் வைத்திருக்கிறேன் என் இதயக் கதவையே!
மான்றாட வேண்டியதில்லை நீ திறந்து உள்ளே வரவே!

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (28-Feb-25, 1:37 am)
Tanglish : thiranthu vaa
பார்வை : 2

மேலே