புத்தாண்டே வருக 2025

நாநிலமும் செலுத்திட
நல்ல மழை பொழிந்திட
இல்லாமை அகன்றிட
பொல்லாமை பொசிந்திட
புண்ணியங்கள் பல செய்திட
பக்தி மேலிட
பண்பு ஓங்கிட
ஒற்றுமை உயர்ந்திட
மெல்லிய பூங்காற்றாய்
புத்தாண்டே! புதுப் புனலே !
இல்லங்கள் தோறும் இனித்திட எளியோர் மனம் நிறைந்திட
எல்லோர் வாழ்வும் செழித்திட வருக! புத்தாண்டு வருக!!
2025…

எழுதியவர் : முனைவர் மா.தமிழ்ச்செல்வி (2-Jan-25, 5:56 am)
சேர்த்தது : Dr M Tamilselvi
பார்வை : 27

மேலே