புது வருடம்

பூமித்தாய் பெற்றெடுத்த
வருட குழந்தை இது
பிறந்து ஒருநாள் நிறைவாகி
இரண்டாவது நாள் இன்று
சென்ற காலங்களில் பல இன்னல்கள்
அனுபவித்து அலுத்துப்போய்
இருக்கின்ற வேளையிலே
நல்லதொரு வருடமாய்
நன்மையே நம்பிக் கை கொடுக்க
வந்தது இவ்வருடம் பிறந்துவந்தது
அழகிய இவ்வருடத்தை ஆனந்தமாய் வரவேற்றோம்
மனநிறைவோடு மகிழ்ச்சி பொங்க
என்றென்றும் வரலாறு காணாத
அமைதியும் நல்லாசியும் கண்டு
இன்புற்று வாழ இறைவனை பிரார்த்திப்போம்
வாழ்வில் நலம் பல கண்டு
வாழ்வோம் இனிமையாக
திளைப்போம் அன்பெனும் ஊற்றில்..

எழுதியவர் : பாத்திமா மலர் (2-Jan-25, 12:27 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : puthu varudam
பார்வை : 21

மேலே